Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

அடையாளத்தைத் தேடுவோர்.
நாம் தமிழரல்லர்

“நாங்கள் எங்கள் தோள்களில் கோடரிகளைக் காவிச்சென்றோம். அதனைப் பெருமையுடன் செய்தோம். இப்பொழுது எங்கள் பிள்ளைகள் காதோடு தொலை பேசியைக் காவுகிறார்கள்.

06.02.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

 

யாழ்ப்பாணம் நல்லூரில்தன்னை ஒரு பூர்வகுடியினரெனவும் இலங்கையின் ஆதிமூலக் குடிமகனென அறிமுகப் படுத்துவதில் பெருமையடைகிறார் 68 வயது உள்ளுரவரான கே.மயில்வாகனம். பெரும்பாலும் தமிழரென வகைப்படுத்தப்படும் தனது சமூகம் தமிழரல்லவெனப் பிரகடனப்படுத்துகிறார். இந்த உள்ளுர் சமூகத்தின் அதிகாரபூர்வமற்ற தலைவராக இருக்வேண்டிய இலங்கையின் ஆதிமூலக் குடிகளின் சந்ததிகள்.
அதே வேளை பிறிதொரு பெண்ணான 25 வயதுடையவரும் மிகவும் இளையவருமான சங்கீதா தனது குடும்பத்திற்குப்    பூர்வகுடியினரென்ற அடையாளத்தை அகற்றுவதில் மிகவும் சுறுசுறுப்பாய் முனைகிறார்.
தங்களுடைய மற்றும் தங்கள் சமூகத்தினுடைய வரலாறு சம்பந்தமாக இரு வேறு நபர்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் ஆதிமூல இலங்கையர் மத்தியில் சமூக அபிவிருத்திக்கும் கலாசாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தை வெளிக் காட்டுகிறது.

Three generations: (L to R) S. Jacintha, K. Mailvaganam, Sangeetha.
Three generations: (L to R) S. Jacintha, K. Mailvaganam, Sangeetha.

தங்கள் பக்கம் சார்பாகப் போராடுவதற்கு இருதரப்பினரிடமும் சிறந்த காரணம் இருப்பதுடன் இரு தரப்பு வாதங்களும் கௌரவமானவையே. இவைகள் நிலவரத்தை மேலும் சிரமமுடைய தாக்குகின்றன.
தமதென மயில்வாகனம் கோரும் பாரம்பரியமானது தாங்கள் “கடல் பூர்வீக குடிகள்” என அறியப்பட்டவர்களாகும் இந்தச் சமூகம் கரையோரத்தில் குடியமர்த்தப்பட்டிருந்ததுடன் பின்னர் அதிகாரத்திலிருந்தோரின் அலட்சியத்தினாலும் ஒருவேளை இன வேற்றுமை காரணமாகவும் அவர்கள் தமிழர்களென எளிதாக மீள் வகைப்படுத்தப்பட்டனர்.
“ஆயினும் நாங்கள் தமிழர்களோ அல்லது இந்துக்களோ அல்ல, நாங்கள் பூர்வ குடிகள்” என பூர்வ குடிகளின் சமூகத் தலைவர் நடராசா கனகரத்தினம் வலியுறுத்துகிறார். அவருடைய சமூகத்தின் பிறப்புச் சான்றிதழ்களில் இனத்துவத்தை நிரப்பும் இடத்தில் “பூர்வ குடிகள்” எனக் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அவைகள் எல்லாவற்றிலும் “தமிழர்” எனக் குறிப்பிடப்படுகிறது.
“எங்களுடைய தலைமுறை எடுத்த எடுப்பிலேயே ஒரு பேனா எழுத்துடன் தமிழரென மாற்றப் பட்டுள்ளது” எனக் கூறும் கனகரத்தினம் “இது பெரும் அநீதி” என்கிறார்.
இக் கருத்தை எல்லோரும் ஏற்பதாக இல்லை. உதாரணமாக சங்கீதா தனது பிள்ளைகள் விரும்பாதுவிட்டால் அவர்களைப் பூர்வ குடிகளென நிர்ப்பந்திக்கக் கூடாதென நினைக்கிறார். அவளுடைய மூதாதையர்கள் பல்வேறு கடவுள்களை வழிபட்டபோதும் தனது பிள்ளைகளையும் அதையே செய்ய வேண்டுமென ஏன் நிர்ப்பந்திக்க வேண்டுமெனக் கருதுகிறார்.
“செவிமடுக்கக் கூடியவர்கள் எவருக்காவது நாங்கள் பூர்வ குடிகள் எனக் கத்திக் குளறினாலும் அதனால் எங்களுக்குக் கிடைக்கப்போவது என்ன” என்று கேட்கும் சங்கீதா “எமது அயல் கிராமம் உண்மையான பூர்வகுடிகள் கிராமம். அவர்கள் செய்வது எல்லாம் பிச்சையெடுப்பது ஒன்றுமட்டுமே.”
“எங்கள் பாட்டன் பூட்டன்கள் மரங்களையும் கற்பாறைகளையும் வணங்கினார்கள். அடுத்த தலை முறையினர் ஏனைய தெய்வங்களை வழிபட்டனர். ஆனால் இப்பொழுது எங்களில் அநேகமானோர் கிறிஸ்தவர்கள். நாங்கள் மிருகங்கள் போலல்லாது மனிதர்களாக வாழ்கிறோம். ஆனாற் சிலர் இதனை விரும்பவில்லை. இக் கிராமத்திற்கும் அப்பால் உலகமொன்று உள்ளதென்பதை அவர்கள் அறியாதுள்ளனர்” எனச் சிறுமியாக இருந்தபோது உள் நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிப் பல வருடங்களாக இந்தியாவில் வாழ்ந்த சங்கீதா இவ்வாறு கூறுகிறார்.

/children
பாட்டாளிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் குணசேகரம் மைலன் உள் நாட்டு யுத்தமும் 2004ம் ஆண்டில் நடந்த சுனாமிப் பேரனர்த்தமும் இக் கிராம மக்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவென்று கூறுகிறார்.
இப்பொழுது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற் பணிபுரியும் மைலனின் குடும்பம் மதம் மாறவில்லை. “உள் நாட்டு யுத்தம் முடிவடைந்தவுடன் வேறு மதங்களின் பிரதிநிதிகள் எங்கள் கிராமங்களுக்கு வந்தார்கள். அவர்கள் எங்கள் மக்களின் வறிய நிலைமையையும் அறியாமையையும் அனுகூலமாக எடுத்துக்கொண்டு அவர்களைப் பிற மதங்களுக்கு மாற்றினார்கள். இப்பொழுது இந்தக் கிராமத்தில் வௌவேறு கிறிஸ்தவ தேவாலையங்கள் மூன்று உள்ளன. இவைகள் எல்லாவற்றிற்கும் வெளி நாடுகளிலிருந்து நிதிகள் கிடைக்கின்றபோதிலும் எமது மக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. எமது சமூகத்தின் வேர்களுக்கு விசுவாசமாக நாங்கள் இருக்க விரும்பினாலும் தேவாலயப் பணத்திற் தங்கியிருக்க வேண்டியவர்களாகிறோம்” என விளங்கவைக்கும் அவர் “எனது சகோதரி கூட மதம் மாறிவிட்டாள். எமது அடையாளங்களை விட்டுக் கொடுக்காது ஏன் எங்களால் அபிவிருத்தி அடைந்து முன்னேறிச் செல்ல முடியாது” எனக் கேட்கிறார்.
2004ம் ஆண்டின் சுனாமியினால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நீலன்கேணி கிராமத்தை உதாரணமாகக் காட்டுகிறார்.
அங்குள்ள மக்கள் ஈட்டிகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதுடன் தேனும் சேகரித்தார்கள். “நாங்கள் எங்கள் தோள்களிற் கோடரிகளைக் காவிச்சென்றோம். அதனைப் பெருமையுடன் செய்தோம். இப்பொழுது எங்கள் பிள்ளைகள் காதோடு தொலை பேசியைக் காவுகிறார்கள். இவைகளெல்லாம் சுனாமியின் பின்னர் நடைபெறுகின்றன. எங்கள் கிராமம் கடலுக்கு அண்மையில் இருந்தது. ஒரு மத நிறுவனம் வந்து கடற்கரைக்கு அப்பாலே தூரத்தில் வீடுகளை மீளக் கட்டியது. எங்கள் பிள்ளைகள் பாடசாலை விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி ஊட்டப்பட்டனர். இது ஒரு சிறப்பான விடயம். ஆனால் அவர்களின் மதம் மாறிவிட்டது. இப்பொழுது பெற்றோர் இந்துக்கள் பிள்ளைகள் கிறிஸ்தவர்கள். இந்தப் பிள்ளைகளுக்கு எங்கள் சமூகத்தின் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் அக்கறையெதுவும் கிடையாது” என்னும் மைலன் அத்துடன் இவையாவும் நிவாரணம் வழங்கும் நிறுவனங்களினாலேயே செய்யப்பட்டன. கோவில்கள் மட்டுமேயிருந்த ஒரு கிராமத்தில் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியிருக்கிறார்கள்” என்று கூறி முடித்துக்கொண்டார்.
உடலுழைப்பிற்கு வெளிநாடுகளில் கிடைக்கும் பணம் அதிகமெனக் கூறிக் கிராமப்புற இலங்கையரிடம் வெளிநாட்டு வேலை மோகத்தை ஏற்படுத்துகின்றனர் என்று உள்ளூர் வாசிகள் வேறு சிலர் முறையிடுகின்றனர். அவர்கள் திரும்பி வரும்போதுஇஸ்லாம் மதத்தில் சேர்ந்து விட்டார்கள் என்று உள்ளூரவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறான மாற்றம் ஒன்றை விரும்புவதா இல்லையா எனத் தெரிவு செய்வது ஒரு தனிநபர் சுதந்திரமாகும். அத்துடன் தெரிவு செய்யும் ஏதேனும் மாற்றத்திற்குச் சாதக பாதகமான வாதங்களுமுண்டு. ஒரு தனி நபர் மீது மாற்றத்திற்கான அழுத்த கொடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
“எங்கள் சமூகம் அபிவிருத்தி அடைய வேண்டுமென்பதை நான் மறுப்பதற்கில்லை” என உடன்படும் கனகரத்தினம் “ஆனால் எமது சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிறார்.
ஏதேனும் ஒரு சமரசம் இங்கு தேவையாயிருப்பது வெளிப்படையானது. இளைய தலைமுறையினர் இவ்வாறான பிரச்சனைகளுடன் ஏற்கெனவே போராடுகின்றனர்.
சங்கீதாவின் ஒரேயொரு மகள் 13 வயதுடைய ஜசிந்தா உள்ளூர் தமிழ் பாடகாலையில்லை கல்வி கற்கிறாள். ஆனால் அவள் ஒரு ஆசிரியராக வரவேண்டுமெனக் கனவு காண்கிறாள்.
“ஆனால் எங்கள் கிராமப் பாடசாலை அதற்கு உதவமாட்டாது” எனக் கூறும் ஜசிந்தா “எங்கள் பாடசாலையிலிருந்து எக் காலத்திலாயினும் இந்த வேலைக்குச் சென்றவர் யாருமில்லை. ஆனால் தேவாலயத்தில் இருக்கும் பாதிரியார் தான் அடுத்த வருடம் என்னைத் திருகோணமலையில் உள்ள பெரிய பாடசாலைக்கு அனுப்பப் போவதாகக் கூறுகிறார். கழுத்துப்     பட்டியும் அழகான சப்பாத்தும் அணிந்துகொண்டு ஒரு புதிய பாடசாலைக்குப் போவதற்குக் காத்திருக்கிறேன்.”
ஜசிந்தாவின் கனவுகள் தங்கள் சமூகத்தைப் பாதுகாக்க விரும்பும் சமூகத் தலைவர்களின் கனவுகளைச் சந்திக்கும் போது யாருடைய கனவு வெற்றிபெறும் எனச் சிந்திக்க வைக்கிறது.