Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

‘ஆஸ்துமா’!
ஆண்டொன்றுக்கு 800 பேர் மரணம்! கொழும்பு அதிகமாகப் பாதிப்பு!

நோயாளிகளுக்கு மத்தியில் இன்ஹேலர் பற்றி ஒரு தவறான கருத்து உள்ளது. அவர்கள் ஒரு முறை பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் அதில் தங்கி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

18.07.2017  |  
கொழும்பு மாவட்டம்
டாக்டர் எஸ்.முகுந்தன்

“இலங்கையில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர்.” என்கிறார் டாக்டர் எஸ்.முகுந்தன். இவர் இலங்கையில் நுரையீரல் சிகிச்சையளிப்பவர்களுக்கான கல்லூரியின் தலைவரும் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் மருத்துவ ஆலோசகருமாவார். அவருடனான நேர்காணல் வருமாறு.

கேள்வி: ஆஸ்துமா என்றால் என்ன?

டாக்டர் எஸ். முகுந்தன்: ஆஸ்துமா என்பது பெரும்பாலானவர்களில் காணப்படும் நீண்ட கால சுவாச நோயாகும். நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக உண்டாகும் ‘இளைப்பு’அல்லது ‘இழுப்பு’ நோயே ஆஸ்துமா ஆகும். இதனால், சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம் மற்றும் காலப்போக்கில் அதன் தீவிரத்தன்மையில் வழமைக்கு மாறான இருமல் போன்ற அறிகுறிகளை அது கொண்டிருக்கும். ஒவ்வாமையினை தூண்டும் காரணிகள், காலநிலை மாற்றம், சுவாச தொற்றுகள் போன்ற பல்வேறு தூண்டுதல்களுக்கு மூச்சுக்குழாய் உட்படும்போது போது அழற்சி தரும் தூண்டற்பேறு காரணமாக சுவாசப்பாதை ஒடுங்குவதன் மூலம் இந்த நோய் ஏற்படுகின்றது.

 

வைத்திய சாலையில் காத்திருக்கும் நோயாளிகள்
source : Aljazeera
கேள்வி: இலங்கையில்ஆஸ்துமா நோயின் பாதிப்பு 
எவ்வாறுள்ளது?

டாக்டர் எஸ். முகுந்தன்: இலங்கையில் ஆண்டொன்றுக்கு 800 பேர் இந்நோயினால் மரணமடைகின்றனர். இந்நோய்3வது ஆட்கொல்லி நோயாக இனம்காணப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே ஆஸ்துமா நோயினால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு இனம் காணப்பட்டுள்ளனர். நாடுபூராவும் ஒரு மில்லியனாக இருந்த ஆஸ்துமா நோய் கடந்த 10 ஆண்டுகளில் 50 வீதத்தால் இலங்கையில் அதிகரித்துள்ளது. தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

கேள்வி: 21.2 மில்லியன் மக்கள் உள்ள இந்த சிறிய தீவில் 
2மில்லியன் என்பது சற்று அதிகம்தான். இதைக் 
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன நடவடிக்கைகள்
 எடுக்கப்பட்டுள்ளன?

சகல மாவட்டங்களிலும், நோயளிகளுக்கு நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் அளிக்கப்பட்டு, வாராந்த அல்லது மாதாந்த கிளினிக் கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஆஸ்துமா நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் மற்றும் அது தொடர்பான சுவாச நோய் வைத்திய நிபுணர்கள் உள்ளனர். ஏதிர்வரும் காலங்களில் அந்த இரண்டு மாவட்டங்களிலும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மக்கள் தயக்கமில்லாமல் இந்த வசதிகளைப் பயன்படுத்தி நோய் நிவாரணங்களைப் பெற வேண்டும். மக்களின் தயக்கமும் இந்த ப் பெருக்தகத்திற்கு முக்கிய காரணியாக உள்ளதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

கேள்வி: மக்களிடையே இந்த நோய்பற்றிய விழிப்புணர்வு இல்லை
 என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

டாக்டர் எஸ். முகுந்தன்: இந்த நோயின் ஆரம்ப கட்டங்களை மக்கள் அறிந்திருப்பதில்லை. மக்களின் பழைமைவாத சிந்தனைகளால், ஆஸ்துமா நோயாளிகள்கூட ஆஸ்துமா ஒரு உயிருக்கு அபாயமிக்க ஒரு நோய் என அறிந்திருப்பதில்லை. இந்த அறியாமையின் காரணமாகவே, ஆஸ்துமா நோய்த்தாக்கத்திற்கான தினசரி மருத்துவ அனுமதியும் அதிகரித்துள்ளது. அத்துடன் மருந்துகளையும் ஒழுங்காக எடுப்பதில் மக்களுக்கு அறியாமை உள்ளது. உதாரணமாக, நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண ‘இன்ஹேலர்கள்’ உள்ளன. நோய் அறிகுறிகளைத் தடுக்க நோய்த்தடுப்பு இன்ஹேலர் தினசரி தொடர்ந்து பயன்படுத்தப்படவேண்டும். அவை சுவாசக் குழாயின் உணர்திறன் மற்றும் ஒவ்வாமையினைத் தூண்டும் காரணிகளின் தூண்டற்பேறினை தடுக்கின்றன. இந்த நோய்த்தடுப்பு ‘இன்ஹேலர்’ அறிகுறிகள் இல்லாமல் இருப்பினும் பயன்படுத்தப்பட வேண்டும். அதை மக்கள் கவனத்தில் எடுப்பதே இல்லை.

/

நோய் வந்தால் மட்டுமே எடுக்கிறார்கள். நோய் வந்தபின் அதன் அறிகுறிகளைக் குறைப்பதற்கு ‘நிவாரண இன்ஹேலர்’ உள்ளது. அதைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும். விளக்கமாக அறிவுறுத்தல் வழங்கினாலம் பயன்படுத்துவதில் அசமந்த போக்கை மக்கள் காட்டுகின்றனர். அத்துடன் நோயாளிகளுக்கு மத்தியில் இன்ஹேலர் பற்றி ஒரு தவறான கருத்து உள்ளது. அவர்கள் ஒரு முறை பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் அதில் தங்கி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்ஹேலர் விலை உயர்வானது என்ற காரணத்தினாலும் சிகிச்சை நிறுத்தப்படுகின்றது. இவ்வாறான மக்களின் நடவடிக்கைகள் நோய்த் தீவிரத்திற்குக் காரணமாகின்றன. இதனால் அரசாங்கம் ‘ஆஸ்துமா’வைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் அளவு பணம் செலவழித்துக்கொண்டிருக்கிறது.

கேள்வி : கடந்த 10 வருடத்தில் இலங்கையில் 50 வீதத்தால்
 ஆஸ்துமா அதிகரித்துள்ளதாக கூறுகிறீர்கள். இந்த அதிகரிப்புக்கு
 வேறு என்ன என்ன காரணங்கள் இருக்கமுடியும்?

டாக்டர் எஸ். முகுந்தன்: இந்நோயானது, பரம்பரையாகவும், சூழலினாலும் ஏற்படுகிறது. கால நிலை மாற்றம், ஒவ்வாமை, மனஅழுத்தம் என்பனவும் குறித்த காரணிகளாகவுள்ளன. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் ஆஸ்துமா நோய், சூழலினால்தான் ஏற்பட்டுள்ளது. மாசடைதல் காரணியாலேயே அதிகளவு ஏற்பட்டுள்ளது. அதாவது வீட்டினுள் புகைத்தல், தூசு போன்றவற்றாலும் வெளியே வாகனங்களின் புகை, தொழிற்சாலைக் கழிவுகளின் துர்நாற்றம் போன்றவற்றாலும் ஏற்படுகின்ற சூழல் மாசடைவினாலே இவ் ஆஸ்துமா நோய் அதிகரிக்கின்றது.

கேள்வி: ஆஸ்த்துமா நோய் வராமல் எவ்வாறு தடுக்க முடியும்?

டாக்டர் எஸ். முகுந்தன்: ஏனைய நோய்களை போன்று ஆஸ்துமாவை வரும் முன் தடுப்பதுதான்; சிறந்தது. ஆஸ்துமாவை தடுக்கும் மிக முக்கியமான மற்றும் பயனுள்ள வழி ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிககளை தவிர்ப்பதாகும். ஒவ்வாமை ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டது. ஒவ்வொரு நோயாளிகளும் தங்களது ஆஸ்துமாவை அதிகரிக்கும் தூண்டுதல்கள் அல்லது ஒவ்வாமைகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். இந்த பணியில் உதவி பெறுவதற்கு ஒவ்வாமை வல்லுநர்கள் உள்ளனர். இந்த தூண்டுதல்களை முடிந்த அளவுக்கு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.


அனைத்து மாவட்டங்களிலும் ஆஸ்துமா நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் மற்றும் அது தொடர்பான சுவாச நோய் வைத்திய நிபுணர்கள் உள்ளனர்.

ஆஸ்துமாவை அதிகரிக்கக்கூடிய தொழில்கள் உள்ளன. ஆஸ்துமா அறிகுறிகளை தொழில் செய்யும்போது உணர்ந்தால் அவர் ஒரு வைத்தியரை நாடவேண்டும். மற்றும் தூண்டுதல் காரணி என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். ஆஸ்துமாவைத் தடுப்பதில் இன்ஹேலரைப் பயன்படுத்துவதும் முக்கியமான செயற்பாடாகும்.
ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி எனும் நோய் ஆஸ்துமாவுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. அந்த நோயினை சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும். சில நோய்கள் ஆஸ்துமா அறிகுறிகளைப் போன்று இருப்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே சிகிச்சையளிப்பதும் அறிகுறிகள் குணமடையாது இருந்தால் அவர் ஒரு மருத்துவரை நாடவேண்டும்.