Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

“எனது மகனை கடத்திச் சென்று மூன்று வருடங்கள் தடுத்து வைத்திருந்தார்கள். அவனுக்கு நடந்த சித்திரவதையால் இண்டைக்கு ஒரு நடைப்பிணமாக இருக்கிறான். அவன் திரும்பி வருகையில் அவனது உயிர் மாத்திரமே எஞ்சியிருந்தது. “

30.09.2017
100 வயதைத் தாண்டிய தொய்வானை!

நூறு வருஷமாகியும் எதுவும் மாறல…

இலங்கையில் தேயிலைத் தூரில தேங்காயும், மாசியும் கொட்டிக்கிடக்கு. இங்க நல்லா வாழலாம். என்று சொல்லி, எங்கள இங்க கூட்டி வந்தான்க. ஆயி, அப்பனோட தான் இங்க வந்தே. ஆனா, தேயில தூரில தேங்கையையும் காணல, மாசியையும் காணல. நாங்க ஏமாந்திட்டோ.

22.08.2017

பொது மக்கள் எங்களுடன் சுதந்திரமாக உரையாட இதுவரையில் இடமில்லை. ஊடகவியலாளர்கள் எமது அலுவலகத்தை நாடி வந்தால் அவர்களது வாகனங்களை நிறுத்தவதற்கும் இடமில்லை.

30.07.2017

தமிழ் மக்கள் அனுபவிதத்த துயரங்களை நான் இன்னும் உணர்கின்றேன். அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தொடர்கின்றன. இப்போது நான் இந்நாட்டிற்கான திரைப்படத்தை தயாரிக்கிறேன். எல்லா மக்களும் அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

04.06.2017
இலக்கிய செயற்பாட்டாளர் றியாஸ் குரானா

சமூகங்களுக்கிடையில், இலக்கியம் சமரசத்தை வளர்க்காது.!

இனங்களுக்கிடையில் சமரசத்தை வளர்ப்பதுதானா இலக்கியத்தின் பணி? இது ஒரு சிக்கலான கேள்வி. ஆனால், இலக்கியத்திற்கு இப்படி சமரசத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என சிறுபிள்ளைத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது பிற்போக்கான நம்பிக்கை மாத்திரமே.

31.05.2017

நடுநிலைமை என்பது நடைமுறைக்கும் நீதிக்கும் பொருத்தமில்லாத வெறும் வார்த்தையாகும், நடுநிலைவகித்தல் பெண்ணுடைய சந்தர்பங்களை பலயீனப்படுத்துகின்றது………..

15.05.2017

அரசியல்வாதிகள் இன நல்லிணக்கம் தொடர்பில் இனிக்க இனிக்க பேசினாலும், உள்ளுர் தேர்தல் அரசியலை மையப்படுத்தி இனவாதத்தை பரப்புபவர்களாகவும், மக்களுக்கிடையே ஒரு சேய்மைநிலையை தொடர்ந்தும் வைத்திருக்கவுமே விரும்புகின்றனர்.

07.04.2017
கூத்துக்கட்டும் ‘புலவர்’.

“எழுத்தினால் என் வேலையையும் இழந்தேன்”

பத்திரிகைகளிலும் வானொலியிலும் நூற்றுக்கணக்கான கவிதைகள் வெளியாகியுள்ளதாக கூறும் இவர் “சில நேரங்களில் எனது கவிதை பத்திரிகையில் வந்துள்ளது என்று கேள்விப்படுவேன். ஆனால் அதை எடுத்துப் பார்ப்பதற்கு என்னிடம் பணம் இருக்காது….

27.03.2017

நாங்கள் வேலையிலிருந்து விடுப்புப்பெற முடியாது. அத்துடன் சில நாட்களில் காலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை வேலை செய்வோம். நாங்கள் வேலையை முடிக்க வேண்டும்.

23.03.2017
தண்ணீர்..... எல்லா இடத்திலும் தண்ணீர்...

குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லை!

வட-இலங்கையிலிருக்கும் மன்னார் நகரிலிருந்து புத்ளத்திற்கும் அதற்கும் தெற்காகவும் நீண்டு செல்லும் கடற்கரையோரம், அங்கே காணக்கூடிய டொல்பின் மீன்கள், காடுகள் மற்றும் இயற்கை வனப்பு ஆகியவற்றின் காரணமாகப் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகளை அது கவர்கின்றது.

01.03.2017

அரசியலில் ஈடுபடும் மதகுருமார்கள் இலங்கையில் அனைவருக்குமாக சேவையாற்ற வேண்டும். இவ்வாறு மக்களுக்கு சேவையாற்றும் எண்ணத்தோடு மதகுருமார்கள் அரசியலில் ஈடுபட்டால் தவறில்லை.

26.02.2017

நான் கொஞ்சநேரம் திகைத்துபோனேன். ஒண்டுமே நான் எதிர்பார்க்கல, என்ர பிள்ளை செத்துப்போச்சு, விலை மதிக்கமுடியாத என்ர சொத்தை நீங்கள் தெரிஞ்சோ தெரியாமலோ அழிச்சுப்போட்டியள். சம்மந்தப்பட்டவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.

29.11.2016

“கொழும்பில 250 ரூபாக்கு விக்கிற பழச்சாறு இங்க வெறும் 40 ரூபாய் தான். இதால ஒவ்வொரு நாளும் சந்தோசமா ரெண்டு தரம் பழச்சாறு குடிக்கிறன்” என்கிறார் குருநாகலைச் சேர்ந்த சதுர நுவான்.

11.11.2016

  இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேறும் தறுவாயை நெருங்கும் பொழுது நீரில் மூழ்கடிக்கப்பட்ட தங்கள் காணிகளுக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லையென அவ்விடத்து மக்கள் கூறுகின்றனர். அவர்கள் இழப்பீடாகப் பெறக்கூடியதிலும் பார்க்க வாழைத்தோட்டம் பயிரிடும் நிறுவனம் ஒன்று கூடுதலான அனுகூலத்தைப் பெறவுள்ளது என தெரியவருகிறது. ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து அதன்மூலம் அண்மையிலுள்ள பகுதிகளில் நிலவும் நீர்ப்பாசனப் பிரச்சனையைத் தீர்ப்பது சம்பந்தமாக ‘யான் ஓயா’ திட்டம் பல காரணங்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டது. இலங்கையின் மிகப் பெரியது என  […]

05.11.2016

  தூங்காத கிராமமொன்று உண்டு….. என்னும் பாடல் ஒரு காலத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இதுவும் தூங்காத ஒரு கிராமம் பற்றிய ஒரு கதைதான். வடமத்திய மாகாணத்தின் கல்பிட்டிக் குடாக்கடல் மற்றும் சமுத்திரக் கரையோரத்திலிருக்கும் வியப்பு மிக்க கிராமம் கற்பிட்டி. அங்கு வாழும் முன்னூறு வரையான குடும்பங்கள் தொழில் ரீதியாக விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் மலைநாட்டு மற்றும் தாழ் பிரதேச மரக்கறி வகைகளைப் பயிர்செய்து உள்ளூர் உணவுகளுக்குச் சுவை சேர்க்கின்றனர். மீன்பிடி மூலம் நாட்;டிற்குத் தேவையான போஷாக்குக் […]

15.10.2016
நல்லிணக்கம் என்றால்???

நாலு பேர் சொல்லினம்!

 “நாலு சனம் என்ன சொல்லும்…”  அனேகமான தமிழ் வீடுகளில்  இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுவது சர்வசாதாரணம். குடும்ப அங்கத்தவர்களின் நடவடிக்கைகளில் வழமைகள் மாற்றப்படும் போது இந்த வார்த்தை  அனேகமாக பாவிக்கப்படுகிறது. குடும்ப  அலகிற்குள்  நடைபெறும் பல விடயங்கள் ‘சனம் என்ன நினைக்கும்’ என்பதற்காக பார்த்து பார்த்துசெய்யப்படும். ‘நாலு சனம் எங்களுக்கு வேணும்’ என்றுசொல்லும்  அந்த வார்த்தையும் பிரபலமானது. ஒருவர் இறந்த பின் உடலைத் தூக்கிச் செல்ல நாலு பேர்தான்  தேவை. எனவே இந்த நாலுபேர் என்பது ஒரு குறித்த […]

23.09.2016