Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල
இலங்கையில் பணிப்பெண்கள்.

மலையகப் பெண்கள் தேவை!

“இந்த வேலைக்கு விரும்பித்தான் நான் வந்தேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஓய்வில்லாத வேலை, குழந்தை மலம் கழித்த பின்னர் அந்த குழந்தையை குளிப்பாட்டனும், அந்த குழந்தைட உடுப்ப கழுவனும். அப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்“

07.08.2017

நோயாளிகளுக்கு மத்தியில் இன்ஹேலர் பற்றி ஒரு தவறான கருத்து உள்ளது. அவர்கள் ஒரு முறை பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் அதில் தங்கி விடுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

18.07.2017
கும்மி கொட்டும் இளம் பெண்கள் !

அம்மனைக் குளிர்வித்தால் மழை வருமாம்.!

நான் நாகரிகத்தில் வளர்ச்சி கண்ட ஒரு நாட்டில் படித்துவிட்டு அங்குபணியாற்றிய போதும், எனக்கு இதில் நம்பிக்கை உண்டு. “ என்கிறார் இலண்டனில் இருக்கும் பொறியியலாளர் வைசாலி துரைரட்ணம்.

12.07.2017

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலைமைகள் இல்லை.

26.06.2017

போர் முடிந்த பின் ஒரு வருடமும் 9மாதங்களும் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டேன். அங்கு எனக்கு சிந்திப்பதற்கு அதிக நேரம் இருந்தது. பழைய நினைவுகளில் உழன்று உழன்று சம்பவங்களை மீட்டுக்கொண்டிருந்தேன்.

09.05.2017

/ தோல்வாத்திய உருவாக்கற் கலைஞர் சதாசிவம் தெய்வேந்திரன். வேர்களின் திறமையும் தியாகமும் வெளியில் தெரிவதில்லை என்பதுபோல் பலரது அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் செய்நேர்த்திகளும் வெளியில் தெரிவதில்லை. அவர்களும் அதுபற்றி எந்தவித கவலையுமின்றி தமது கடமையை சத்தமின்றி செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் கடந்த 23 வருடங்களாக தனது தொழில் நேர்த்தியாலும் நம்பிக்கைப்பண்பாலும் உயர்ந்து தோல்வாத்தியக் கருவிகளை உருவாக்கும் கலையில் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் சதாசிவம் தெய்வேந்திரன். கடந்த 23வருடங்களில் 12ஆயிரத்திற்கு மேற்பட்ட மிருதங்கங்களை செய்திருக்கிறார். கச்சேரி கிழக்கு […]

08.05.2017

பாசையூர் கடற்றொழில் சமூகத்தின் மனக்குமுறல்   “முந்தி எங்கட ஊரை சின்ன சிங்கப்பூர் எண்டு சொல்லுவினம். கம்பஸ் கிடைச்சும் அத விட கடலிலல கூடுதலா உழைக்கலாம் என்டு தொழில் செய்த வரலாறும் இருந்தது. ஆனா இப்ப இந்தத் தொழிலே வேணாமெண்டு வேற தொழிலுகளை நாடிப்போற அளவுக்கு நிலமை வந்திட்டுது. எங்களுக்கே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கேக்க இனிவாற எங்கட தலைமுறைக்கு இன்னும் நிறையப் பிரச்சனைகள் இருக்கும். ஆரிட்ட சொல்லுறது சொல்லியும் பிரியோசனமில்லை” என தன்னுடைய ஊரையும் தொழிலையும் நினைத்து […]

02.05.2017

பகலெல்லாம் மூட்டை தூக்கிக்களைத்து வரும் இவர், இரவு நேரங்களில் நெஞ்சுவலியால் அவஸ்தைப் படுவார்……..அப்போதுதான் என் பாட்டி எனக்கு இந்த ‘உருக்குமிளகுக் கஞ்சி’யைப் பற்றிச் சொன்னார்…….

01.05.2017

“ஒருவனுக்கு ‘நல்ல பாம்பு’ கடிச்சு போட்டுது கொண்டுவந்தானுகள் மருந்து செய்யக்குள்ள இதென்ன அத்துமீறிபோகுது எண்டு கேட்கானுகள். பொறகலா ஓடினாதான் அதுவும் ஓடும். அத நான் மறிப்பன். என்று சொன்னன். சொல்லி சிறிதுநேரத்தில் ……

24.04.2017

மரபுரீதியற்ற தொழிகளுக்கு பெண்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறான பயிற்சியளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

31.03.2017

“நானும் எமது ஊரில் உள்ள ஒரு சில இளைஞர்களும் சேர்ந்து இந்த இடத்திற்கு வர்ணம் பூசினோம். நான் அதற்காக எனது பணத்தை செலவு செய்தேன் வர்ணம் பூசிய பின்னர் அந்த இடம் மிகவும் அழகாக இருக்கின்றது. இரவில் மின்னொளியில் பிரகாசிக்கும் இந்த தூபி மேலும் ஜொலிக்கின்றது”

26.03.2017

“பெண்கள் அரசியலில் பங்குபற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும். பெண்கள் சம காலத்தில் எல்லாத்துறைகளிலும் ஈடுபாடுகொண்டவர்களாக தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். பெண்கள் தொடர்பான செயற்திட்டங்களோ தீர்மானங்களோ இறுதியாக எடுக்கப்படும் இடமாகிய பாராளுமன்றத்தில் பெண்கள் அதிகமானவர்கள் பிரதிநிதித்துவம் இருக்குமாயின், பெரும்பாலான பிரச்சினைகளை தாமாகவே தீர்ப்பதற்குரிய உபாயங்களை எங்களால் ஏற்படுத்த முடியும். ஆகவே அரசியலில் பெண்கள் ஈடுபடவேண்டும், அவ் ஈடுபாடு பிரதேசமட்டத்தில், பிரதேச சபைகளில் பிரவேசத்துடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” இது இலங்கை வடபுலம் யாழ்ப்பாணத்தில் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் […]

14.03.2017
இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் நஸ்பியா அஜித்

எனது படைப்புக்கள் தமிழ், முஸ்லிம் உறவை பலமாக்கும்

“தொண்ணூறுகளுக்கு முன்னம் யாழ்ப்பாணத்தில தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரே குடும்பமாகப் பழகினனாங்கள். இனச்சண்டையோட எல்லாம் மாறிப்போட்டுது. திரும்ப அந்த நிலைமை வரவேணும் என்று இலக்கியம் மூலம் போராடிக்கொண்டிருக்கிறன்” என்கிறார் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் நஸ்மியா அஜித். இவர் யுத்தகாலத்தில் 1990களில் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெயர்ந்து புத்தளத்தில் 25 வருடங்களாக வசித்து வந்தார். யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நஸ்மியா அஜித் […]

14.03.2017

பால்நிலை ரீதியான எல்லைகளை உடைத்தெறிவதற்குப் குமாரி ஒரு போதும் பின் நின்றதில்லை. அவளுடைய குடும்பம் றுவான்வெலையைச் சேர்ந்தது என்பதுடன் தனது தகப்பனாரின் இயந்திரங்கள் பழுதுபார்க்கும் வேலையில் உதவிபுரியத் தொடங்கியது அல்லாமல் பார ஊர்தி செலுத்தக் கற்றுக் கொள்ளத் தொடங்கியதன் மூலம் குமாரி உள்ளூர் வாசிகளைத் திகைப்படைய வைத்தாள்.

08.03.2017

பெற்றோர்களிடம் திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை.

25.02.2017

“என்னதான் இஸ்லாமிய நண்பி எனக்கு இருந்தாலும், அவர்களது வீட்டில் சாப்பிடுவது எனக்கு கொஞ்சம் கஸ்ரமாகவே இருக்கும். காரணம்…..

19.02.2017