Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மாற்றுத் திறனாளி விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்
தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

  “பாடசாலை பருவத்தில் களுவன்கேணி கடலில் குளிப்பதற்காக சென்றவேளை கடலில் மிதந்து வந்த வட்டமான மர்மப் பொருளை எடுத்து பிரித்து பார்த்தபோது அம்மர்ம பொருள் வெடித்து சிதறியதில் எனது இரு கைகளும் சிதறின. அன்றுமுதல் இன்றுவரை இரண்டு கைகளும் இல்லாமலேயே நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனது வேலைகளை நானே செய்து வருகிறேன் மோட்டார்சைக்கிள் ஓட்டுவேன் பிறரின் உதவி நாடியதில்லை. எனது தன்னம்பிக்கை காரணமாக சொந்த காலில் என்னால் நிற்க முடிகிறது.” ஏன்கிறார் இரண்டு கைகளையும் இழந்த மீன் மொத்த […]

20.02.2018  |  
மட்டக்களப்பு மாவட்டம்

 

“பாடசாலை பருவத்தில் களுவன்கேணி கடலில் குளிப்பதற்காக சென்றவேளை கடலில் மிதந்து வந்த வட்டமான மர்மப் பொருளை எடுத்து பிரித்து பார்த்தபோது அம்மர்ம பொருள் வெடித்து சிதறியதில் எனது இரு கைகளும் சிதறின. அன்றுமுதல் இன்றுவரை இரண்டு கைகளும் இல்லாமலேயே நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனது வேலைகளை நானே செய்து வருகிறேன் மோட்டார்சைக்கிள் ஓட்டுவேன் பிறரின் உதவி நாடியதில்லை. எனது தன்னம்பிக்கை காரணமாக சொந்த காலில் என்னால் நிற்க முடிகிறது.” ஏன்கிறார் இரண்டு கைகளையும் இழந்த மீன் மொத்த வியாபாரம் செய்யும் விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்

/
தனது மாணவ பருவதில் (17வயதில்) இரு கரங்களையும் இழந்த மட்டக்களப்பு களுவன்கேணியைச் சேர்ந்த 39 வயதுடைய இவர் கட்டுமரம் இணையத்தளத்திற்காக தனது கடந்த காலத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“நான் விபத்தொன்றில் எனது கைளை இழந்தேன்இதனால் யுத்தகாலத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் சந்தேகங்களையும் நெருக்கடிகளையும் நான் எதிர்கொண்டிருந்தேன்.குறிப்பாக எமது பிரதேச இராணுவ முகாமில் படையினர்கள் காலத்துக்கு காலம் மாற்றப்படுவார்கள் அவர்களிடத்திற்கு; அவர்கள் மாற்றம் பெற்று சென்றதும் புதிதாக வருபவர்களால் ஒவ்வொரு தடவையம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு நடந்த சம்பவத்தை விளங்கவைப்பதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளேன்.” ஏன்று தனது கடந்த காலங்களை இரைமீட்டார்.

கடலில் மிதந்துவந்த வட்ட வடிவத்திலான மர்மப் பொருளொன்றை எடுத்து பிரித்த போதுதான் எனது இரு கைகளை இழக்க வேண்டி ஏற்பட்டது என்று தனக்கு நடந்த சம்பவத்தை விளக்கினார்.
“ எமது பிரதேசத்தில் பல்வேறு சந்தர்பங்களில் கைகள் மற்றும் கால்கள் இழந்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் இரு வகையினர் உள்ளனர் ஒரு வகையினர் தன்னம்பிக்கையை இழக்காமல் உள்ளார்கள் மறு தரப்பினர் தன்னம்பிக்கையை இழந்து வாழ்ககின்றனர். தன்னம்பிக்கையை இழந்தவர்கள் பிறரை நம்பி வாழ்கின்றார்கள். நான் அவ்வாறில்லை.” மேலும் தொடர்ந்தார்.

/
“வெடித்து சிதறி கைகள் இழந்த நேரத்தில் எனது எதிர்காலம் எவ்வாறு அமைந்துவிடுமோ? என்ற ஏக்கமும் கவலையும் இருந்தது. எனது பெற்றோர் தந்த தைரியம் ஊக்கம் எனது முயற்சி தன்னம்பிக்கை காரணமாக இன்றைக்கு நான் ஒரு மொத்த மீன் வியாபாரத்தில் முன்னணியில் வியாபாரியாக இருப்பது குறித்து பெருமைப்படுகிறேன்.” என்றார்.
கைகள் இரண்டும் துண்டிப்பு காரணமாக இவர் கல்வியை கைவிடும் நிலமைக்கு தள்ளப்பட்டார்;. கடற்கரையில் துண்டிக்கப்பட்ட கைகளோடு முதலில் கடலில் மீன்பிடி படகுகளை தள்ளுவதைத் தொழிலாக கொணடிருந்தர்.பின்னர் அதன் மூலம் கிடைத்த நாளாந்த வருமானத்தை சிறுகச்சிறுக சேமித்து மீன்பிடி படகு ஒன்றை வாங்கி ஆட்களை வைத்து தொழில் புரிகிறார். பின்னர் இரண்டு மீன்பிடிப் படகுகளுக்கு உரிமையாளராகி தற்போது மட்டக்களப்பிலிருந்து பிற இடங்களுக்கு மீன்களை அனுப்பும் வர்த்தகராக இருக்கிறார். இவரால் மோட்டார்சைக்கிள் ஓட்ட முடியும், படகு செலுத்த முடியும், தனது ஆடைகளை தானே மாற்றிக் கொள்கிறார். உணவு உண்ணுகிறார், பாரம் தூக்குகிறார்.
பாடசாலை பருவவத்தில் காதலித்த பெண்ணை அவர்களது பெற்றோரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் கரம்பிடித்து. மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாக இருக்கிறார்.தற்போது 25 லட்சம் செலவில் வீடுகட்டியுள்ளார்.

“நாங்கள் ,ருவரும் பாடசாலைப் பருவத்தில் காதலித்தோம் எனது கணவருக்கு ஏற்பட்ட எதிர்பாரத சம்பவம் காரணமாக எமது திருமணத்திற்கு தடைகள் எற்பட்டது. கைகளை ,ழந்தவனுடன் எப்படி வாழப் போகிறாய் என எனது உறவுகள் கூட வினா எழுப்பி அதற்கு திருமணத்திற்கு தடைகளை ஏற்படுத்த முற்பட்டனர். நான் தைரியத்துடன் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எது காதலனை கரம்பிடித்தேன்.எனது கணவர் இரு கைகளையும் இழந்திருந்தாலும் அவரைத்தான் நான் கரம்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன. வாழ்க்கையை சவாலாக எடுத்தோம் அந்த நேரத்தில் எமக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கனை சவாலாக எடுத்தோம் அந்த சவாலை வெற்றிகொண்டோம். முதலாவது குழந்தை பிறந்தது பிரிந்த பெற்றோர் உட்பட உறவுகள் இணைந்துகொண்டார்கள். நானோ எனது கணவரோ இதுவரையில் அவரது கரங்கள் இழக்கப்பட்டதை ஒரு குறைபாடாக கருதவில்லை.” என்கிறார் லோகேஸ்வரனின் மனைவி தேவமலர்.

/
“மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை எந்தவொரு மாற்றுத்திறனாளிகளும் கைவிடப்பட்ட நிலையில் இல்லை. மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் இயங்குகின்றன அவர்கள் மிகவும் ஒற்றுமையுடன் இயங்குகிறார்கள்” என மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சாரங்கபாணி அருள்மொழி கூறுகிறார்.
மட்டகக்களப்பு மாவட்டத்தில் 7176; மாற்றுத்திரனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு சமூகசேவைத் திணைக்களத்தினுடாவும் அரசசார்பற்ற நிறுவனஙகளின் ஊடாகவும் உதவிகள் வழங்கப்படுகின்றன. தரிசனம், வாழ்வோசை, ஓசானம், மென்கப் உள்ளிட்ட நிறுவனங்கள் வலது குறைந்த பிள்ளைகளை பராமரிக்கின்ற அவர்களுக்கு திணைக்களத்தினுடாக உதவிகள் வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்பில் இரு கண்களும் பார்வையற்றோர் 280 பேரும் ஒரு கண் தெரிந்தவர்கள் 436 பேரும், விஷேட உபகரணம் பாவிப்பவர்கள் 402 பேரும், பேச்சு மற்றும் கேட்டல் குறைபாடு உள்ளோர் 1120 பேரும், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளோர் 501 பேரும், பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் 374 பேரும், உபகரணம் பாவித்து பணயம் மேற்கொள்வோர் 278 பேரும், ஒரு கை, இரண்டு கைகள் அவயவம் இல்லாதிருப்பவர்கள் 335 பேரும், ஒரு கை அல்லது இரண்டு கைகளும் இயங்காதிருப்பவர்கள் 345 பேரும், ஒரு பாதம் அல்லது இரு பாதமும் இல்லாதிருப்பவர்கள் 449 பேரும், பாதத்தில் ஏனைய குறைபாடுகள் உள்ளோர் 432 பேரும், புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளோர் 822 பேரும், வலிப்பு உள்ளோர் 194 பேரும், புதுவிதமான நடத்தை உள்ளோர் 278 பேரும், பல்வேறு அங்கவீனமுள்ளோர் பேரும் 399 ஏனைய குறைபாடுகள் உள்ளோர் 531 பேரும் உள்ளனர்.
இதில் தரிசனம் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தேசிய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் ஒருவர் தேசிய அணில் விளையாடுகிறார். இருக்கை கரப்பந்து(ளுவைவiபெ ஏழடடநலடியடட) தேசிய அணிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய ரீதியில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டியில் மாவட்டத்திலிருந்து சென்றவர்களில் மூன்று தங்கப் பதக்கம் உட்பட 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இவை சரியான பயிற்சி இன்றி சென்றதால் கிடைத்த பதக்கங்கள் சரியான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தால் மேலும் பல பதக்கங்களை பெற்றிருக்க முடியும்.


மாற்றுத் திறளாளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ்வது யுத்தத்தினல் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீள் எழுச்சிக்கு துணைநிற்கும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அவர்கள் தங்களது தன்னம்பிக்கை மூலம் அடைந்த வெற்றிகள் ஏனையோருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகின்றன.