Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

‘தொங்கு அவை’ மற்றும் ‘பொருந்தா கூட்டணி’

/   இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ள போதிலும் சபைகளில் எந்த கட்சி ஆட்சியமைப்பது என்ற இழுபறிநிலை தொடர்கிறது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முடிவுகளைப் பொறுத்தவரையில் பிரதான கட்சிகள் சபைகளில் கூடுதல் வட்டாரங்களைப் பெற்றுள்ள போதிலும் வட்டாரம் மற்றும் விகிதாரசார அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறை காரணமாக வட்டார ரீதயாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளை விட வட்டார ரீதியாக வெற்றி பெறாத கட்சிகளே கூடுதல் பலனைப் பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை காத்தான்குடி […]

20.02.2018

/

 

இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ள போதிலும் சபைகளில் எந்த கட்சி ஆட்சியமைப்பது என்ற இழுபறிநிலை தொடர்கிறது.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முடிவுகளைப் பொறுத்தவரையில் பிரதான கட்சிகள் சபைகளில் கூடுதல் வட்டாரங்களைப் பெற்றுள்ள போதிலும் வட்டாரம் மற்றும் விகிதாரசார அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறை காரணமாக வட்டார ரீதயாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளை விட வட்டார ரீதியாக வெற்றி பெறாத கட்சிகளே கூடுதல் பலனைப் பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை காத்தான்குடி நகரசபை தவிரந்த ஏனைய 11 உள்ளுராட்சி சபைகளில் எந்தகட்சியும் அறுதிப் பெறும்பான்மை பெறவில்லை.

மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் தேசியகூட்டமைப்பு 20 வட்டாரங்களில் 17 வட்டாரங்களை கைப்பற்றியுள்ளது. வேட்பாளர்களுக்கு கிடைத்த 36.72 சதவீத வாக்குகளின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய உறுப்பினர்கள் 12 ஆனால் வட்டார அடிப்படையில் 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக தொங்கு நிலையில் 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு 33 உறுப்பினர்களைக் கொண்ட மாநகர சபையின் உறுப்பினர்கள் 38 பிரதிநிதியாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று ஏனை சபைகளிலும் காண முடிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர்ப்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று வடக்கு (வாகரை), மண்முனைப்பற்று (ஆரையம்பதி), மண்முனை மேற்கு (வவுணதீவு), மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை), மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிக்குடி), போரதீவுப்பற்று(வெல்லாவெளி), ஆகிய உள்ளுராட்சி சபைகளில் பெரும்பாண்மையாக ஆசனஙக்ளை தமிழ் மற்றும் தேசிய கட்சிகளும் பெற்றுள்ளன.

காத்தான்குடி, ஏறாவூர் நகரசபை மற்றும் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரசேதச சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் முஸ்லிம் மற்றும் தேசிய கட்சிகள் பெரும்பான்மையான ஆசனங்களையும் பெரும்பாண்மையாக பெற்றுள்ளன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேர்தல் காலத்தில் மாறுபட்ட ரீதியில் கட்சிகளையோ சுயேட்சைக்குழுக்களையோ ஆதரித்திருந்தாலும் அனேகமான தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கே வாக்களித்துள்ளார்கள்.

தங்களுடைய வாக்குகள் தமிழ் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் பிரிந்து போனமையினால் ஒரு தமிழ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமது பிரதேசங்களில் தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க தேசிய கட்சிகள் அல்லது முஸ்லிம் கட்சிகள் ஆதரவை நாடுவதை தற்போதைய சூழ்நிலையில் தவிர்த்துக்கொள்வதையே விருமபுகிறார்கள்.

தமிழ் கட்சிகளின் தலைமைகள் அது பற்றி பேசி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளார்கள்.

இது விடயமாக கட்டுமரம் இணையத்தளம் பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறியமுற்பட்டது.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் அதிகபடியான உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் பெற்றுள்ளன. இந்த மூன்று தமிழ் கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகள் நிருபித்துக் காட்டியுள்ளன”

/

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் சபாரெத்தினம் சிவலோகநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே மட்டக்களப்பு மாவட்டடத்தின் அபிவிருத்தி தங்குதடையின்றி நடைபெறக்கூடிய சூழல் ஏற்படும். தமிழ் பிரசேதங்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதே காலத்தின் கட்டாயமாகும்” என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கருத்து தெரிவித்திருந்தார்.

/

இலங்கை தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கருத்து வெளியிடுகையில்
“நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறாத காரணத்தினால் மாவட்டத்தில் சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர வேண்டிய நிர்ப்பந்தம் வந்துள்ளது.நாங்கள் தமிழ் தேசிய உணர்வோடு பயணிக்க கூடிய கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவோம். பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்ற கட்சியை நிருவாகம் நடத்துவதற்கு உதவக்கூடிய வகையிலே ஏனைய கட்சிகள் செயற்பட வேண்டும்.இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பெண் வேட்பாளர்களையும் வட்டாரங்களில் நிறுத்தியிருந்தோம் ஆனால் பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் மக்கள் அதிகமாக விருப்பம் காட்டவி;ல்லை. எங்களது கட்சிக்கு இந்தத் தேர்தலில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக நாங்கள் உள்ளோம். வட்டார அடிப்படையில் 80சத வீத வட்டாரங்களைக் பெற்றிருக்கின்றோம். ஏனைய கட்சிகள் விகிதாசார அடிப்படையில் பிரதிநிதிகளைப் பெற்றிருக்கிறார்கள். 20 வட்டாரங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில் 17 வட்டாரங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்றோம்.

இந்த தேர்தலில் ஓரிரு சபைகளைத் தவிர ஏனைய சபைகளில் அறுதிப் பெரும்பான்மை எந்த கட்சிகளும் பெறவில்லை. எல்லோரும் கூட்டு ஆட்சியை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.” என்று குறிப்பிட்டார்.

துற்போது நடந்துள்ள கலப்பு தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரை பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டன.

இதில் தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கணிசமான உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.

நேரடி தொகுதிவாரி தேர்தல் மற்றும் விகிதாசார தேர்தல் ஆகியவற்றின் ஒரு கலப்பு முறையாக இந்த தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டது. நேரடி தொகுதி வாரியிலான முறைமையில் உள்ள சிறுபான்மை வாக்குகள் கணக்கில் இல்லாமல் போதல், விகிதாசார தேர்தலில் பெரும் தொகுதிகளில் அதிக பணவிரயத்தை வேட்பாளருக்கு ஏற்படுத்துதல் மற்றும் நேரடியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போதல் ஆகிய பிரச்சனைகளை கையாள இந்த கலப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

வடக்குக்கிழக்கில் காணப்படும்
‘தொங்கு அவை’ மற்றும் ”பொருந்தா கூட்டணி’
குழப்பகரமான நிலையை ஏற்படுத்தி ஆட்சியமைப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

“ஊள்ளுராட்சித் தேர்தலின் வாக்குகளை கணிக்கும் முறை குழப்பத்தை தந்திருக்கிறது” என்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்

அரசியல் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மை பெறாமைக்கு இந்தப் புதிய கலப்பு தேர்தல் முறையே; காரணமென்று கட்சிகளும்; குற்றச் சாட்டுக்கின்றன.

????????????????????????????????????

/