Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கட்டுவாப்பிட்டிய தற்கொலை தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த 10 வயதான மற்றும் 3 வயதான இரண்டு சிறுமிகளின் தலையின் பாதிக்கப்பட்ட ஓட்டுப் பகுதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நடக்கும் வரை இந்த உடற் பாகத்தை நாம் பாதுகாத்து பதப்படுத்தி வைக்க வேண்டும்.

11.07.2019

இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.
ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல.

09.06.2019

நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் சார்ந்து 10 வீதமும் சாதாரண மக்கள் 90 வீதமும் உள்ளனர். எனவே பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்கம்தான் மன மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எமது நிறுவனத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

27.06.2019

சமூகங்களுக்கிடையிலானநல்லிணக்கம் என்பது இலங்கை அரச நிகழ்ச்சிநிரலில் பிரதான விடயமாக இடம்பிடிக்கும் வரையில் இந்தநாட்டிலே இனமுரண்பாடுகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதற்கு இலங்கை அரசு இதயசுத்தியோடு செயலாற்ற முன்வருதல் வேண்டும்.

07.07.2019

எங்கட ஆட்டோ ஒரு சிங்களவர். அந்த ஐயாவைத்தான் எல்லா இடங்களிற்கும் நாம் அழைத்துச்செல்வோம். எங்கு போகச்சொன்னாலும் கேள்விகேட்காது போவார். காசும் கொஞ்சமாகத்தான் எடுப்பார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாங்கள் கொட்டாராமுல்லைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் ‘இப்போதைய சூழ்நிலையில் வெளியில் நடமாடவும் சரியான பயமாக இருக்கின்றது…?’ என்றேன். அவர் சொன்னார்….

02.07.2019

சிலர் அவ்வாறான ஒரு குரோத  மனநிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. பிரதானமாக தர்மத்தை பற்றி கதைக்கும் சில பௌத்த பிக்குகளே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விடயங்களை பேசுவதை அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. யார் என்ன கூறினாலும் நியாயமற்ற கதைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

08.07.2019

இணக்கபூர்வமான செயற்பாடுகளின் இறுதியில் அவரவர் இன அடையாளங்களும் தனித்துவங்களும் பாதுகாக்கப்படும் நிலை உருவாகின்றது. இதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. இதுவே நாட்டுக்கு பயன்மிக்கதாக அமையும் எனலாம்.

15.06.2019

“2005 ஆம் ஆண்டு இந்த முன்பள்ளியை ஆரம்பிக்கும் போது மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டே ஆரம்பித்தோம். தற்பொழுது முப்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இங்கே கற்கிறார்கள். இங்கு கல்வி கற்று வரும் மாணவர்களினது மத விழாக்களை இங்கு கொண்டாடி மகிழ்விப்போம். சரஸ்வதி பூஜைஇ வெசாக்இ ரமழான்இ கிறிஸ்மஸ் என எல்லா மத நிகழ்வுகளையும் கொண்டாடி குழந்தைகளுக்கு அதைப்பற்றி தெரிந்துகொள்ள சந்தர்ப்பத்தை வழங்குகிறோம்.” என்கிறார் முன்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமார் ராதிகா. இந்த முன்பள்ளி அமைந்திருப்பது கல்முனை சுபத்ரா ராமய […]

13.06.2019

ஒரு காலத்தில் இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறிப்பிட்ட சில தீவிரவாதிகள் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது. இங்கே சில மதகுருமார், சில கல்வியாளர்கள், சில அரசியல் வாதிகள், சமூகத்தின் சில முக்கிய புள்ளிகள், சில செல்வந்தவர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் பலரும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான பல செயற்பாடுகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பங்காற்றுகிறார்கள்.

29.06.2019