Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இலங்கை குறவர்கள்!
 பதிவுகள் இல்லாமையால் நிரந்தரமாகக் குடியமர முடியாது.

பெற்றோர்களிடம் திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை.

25.02.2017  |  
அனுராதபுரம் மாவட்டம்
A scene from the gypsy village where many families share one water source.

முந்திய காலங்களில் குறவர்களாக நாடோடிகளாக இருந்த ஒரு சமூகம் இலங்கையின்  வடமத்திய பகுதியில் ஒரு கிராமத்தை அமைத்துள்ளனர். ஆனால் இன்று அவர்களால் அது முடியாதுள்ளது. இதற்கான அவர்களது ஆவணங்கள் தொலைந்துவிட்டன என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கும் பொறுப்பற்றவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மிஹிந்தலைப் பகுதியில் சியாம்பலகஸ்வேவா என்னும் கிராமத்தில் வசிக்கும் தெலுங்கர் என இந்த நாட்டில் அறியப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவியாகிய ஆர். காளியம்மா தனது மக்கள் நாடோடிகளாக வாழ்ந்த வாழ்க்கையில் சலிப்படைந்து விட்டனர் எனக் கூறுகிறார்.
தெலுங்கு மொழி பேசிவந்த காரணத்தினால் தெலுங்கர்களென வகைப்படுத்தப்பட்ட இக் கூட்டத்தினரில் பெரும்பாலானவர்கள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா எனப்படும் இந்திய மாநிலங்களிலிருந்து வந்தவர்களாகும். நீண்ட காலமாக இலங்கையில் வாழ்ந்து வரும் இக் கூட்டத்தினர் தங்களுடைய நாடோடி வாழ்க்கை முறைகளினாலும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பெண்கள் குறி சொல்லுதல் ஆண்கள் வித்தைகள் காட்டுவதற்காகக் குரங்குகளைப் பழக்குதல் பாம்புகளை ஆட வைத்தல் முதலிவற்றால் நன்கு அறியப்பட்டவர்களாகும்.
சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளது. ஆண்கள் தகுந்த வேலைகளைப் பெற முடியாததுடன் அவர்கள் பேரூந்துகளில் பிரயாணஞ் செய்யும் பொழுது விரும்ப முடியாத மணம் எங்களிடமிருந்து வருகிறதெனக் கூறி ஏனையவர்கள் எங்கள் அருகில் வருவ தில்லையென காளியம்மா முறையிடுகிறார். ஆகவே 60 பிள்ளைகள் வரை உள்ள 30 குடும்பங்களைக் கொண்ட காளியம்மாவின்கூட்டத்தினர் இலங்கையின் வடமத்திய பகுதியில் நிலையாகக் குடியமரத் தீர்மானித்தனர்.
இக் குறவர்களுக்கு மரத்தினாற் கட்டப்பட்ட வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வரை அவர்கள் வசிப்பதற்குக் கூடாரங்களையும் சுகாதார பராமரிப்பு சேவைகளையும் வழங்கிய உள்ளூராட்சி அதிகாரிகளின் சிறந்த முயற்சியின் போதும் இன்னமும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கவே செய்கிறது. – அதுதான் ஆவணங்கள்.
இது அதிகாரத்தில் இருப்பவர்களினால் முடிச்சு அவிழ்க்கமுடியாத சீரில்லாத வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒரே இடத்தையே சுற்றிவரும் வளைமாகும். கே.சாமந்தியின் நாலரை வயதுடைய மகன் இதற்கு ஒரு உதாரணமாகும். அவனிடம் ஒரு பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அவனால் பாடசாலைக்குச் செல்ல முடிவில்லை. அதேவேளை இருபத்தெட்டு வயதுடைய தகப்பனார் தனது நான்கு பிள்ளைகளும் இதே பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர் என்கிறார். இந்தக் குறவர்களிடம்    எக்காலத்திலும் பிறப்புச் சான்றிதழ் என்ற ஒன்று இருந்தில்லை.


இந்தக் குறவர்களிடம்    எக்காலத்திலும் பிறப்புச் சான்றிதழ் என்ற ஒன்று இருந்தில்லை.

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தினால் பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாதவர் களாகச் சிறுவர்கள் உள்ளனர்.பிறப்புச் சான்றிதழ் ஏன் இல்லை? பெற்றோர்களிடம் திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை. ‘பிறப்புச் சான்றிதழ்கள்    இல்லையெனில் அவர்களுக்கு திருமணச் சான்றிதழும் இருக்காது.’ என காளியம்மா விளங்க வைக்கிறார். இப்படியே இந்த வளையம் சுற்றிக்கொண்டிருக்கிறது.

ළමයින් වැඩි දෙනා දැන් අකාලයේම වැඩිහිටියන් වී හමාරය.
பெரியவர்களாகிவிட்ட சிறுவர்கள்.

மிஹிந்தலையில் அரசாங்க சேவைகளுக்குத் தலைவராக இருக்கும் பிரதேச செயலர் றுவான் எக்கனாயகா தனது அலுவலர்களைப் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குமாறு பணித்தாகவும் இந்தச் சமூகத்திலிருக்கும் இள வயதினருக்கு நீடித்த காலப் பயிற்சித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இதைவிடவும் குறவர் சமூகத்தினர் மத்தியில் இளவயதுத் திருமணம் போன்ற பிரச்சினைகளும் உண்டு. இக் கூட்டத்தினரிடம் 13 வயதானவுடன் மணமுடித்துக் கொடுப்பது ஒரு மரபாயிருப்பதுடன் அக் கிராமத்தினூடாகச்   செல்லும்பொழுது அங்கு அரைகுறையாக கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களில் 15 அல்லது 16 வயதுப் பெண்பிள்கைள் குழந்தைகளுடன் காணப்படுவது சாதாரண விடயமாகும்.
இந்த மக்கள் மாறுபட்ட, ஆரோக்கியமான மற்றும் நிலையான ஒரு வாழ்க்கை வாழத் தீர்மானித்திருக்கும் நிலையில் இல்லாதுபோன சில ஆவணங்களால் அது அவர்களுக்கு எட்டாததாக இருப்பது அல்லது அதிலிருந்து அவர்களைத் தடைசெய்வது நியாயமற்றதாகவே அவதானிகளுக்குத் தோன்றுகிறது.