இவர்களா மாற்றுத்திறனாளிகள் !?
– வர்மா- கச்சான் பிடுங்கும் காலம் வந்துவிட்டது.!வாழை குலை போட்டுள்ளது. மரவள்ளி நல்ல கிழங்குகளுடன் செழிப்புற்றுள்ளது. பீற்றூட், புடலங்காய், வெண்டி என மரக்கறிகளுக்கும் பஞ்சமில்லை. தென்னைகள் காய்ப்பதற்கு தயாராகிவிட்டன. ஜம்புவும் பலாவும் காய்க்கும் காலம் வெகு தொலைவிலில்லை. இவ்வாறு நிலம் தரும் பயனை நன்கு அனுபவிக்கும் மரங்களும் தாவரங்களும் என அந்த வீடு நிமிர்ந்துநிற்கிறது. வவுனியாவில் கணேசபுர கிராமத்தில் 2010இல் குடியேறிய சிவாஜினி கைக்குழந்தையுடன் நிலத்தை செழிப்பாக்கத்தொடங்கியவர். இன்று வரை தொடர்கிறார். பயிர் வளர்ப்பு […]
என் குடும்பத்துக்கு ஒரு வீடு வேண்டும்
யாழ்பாணம் கச்சேரிப் பகுதியில் மிருதங்கம் தபேலா போன்ற இசைக்கருவிகளை 21 வருடங்களாக தயாரித்து வருகிறார் சதாசிவம் தெய்வேந்திரம். 21 வருட காலமாக சளைக்காது இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வசிக்கிறார். 5 பிள்ளைகள். அனைவரும் பாடசாலைகளில் படிக்கிறார்கள். “நாளாந்தம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?” “300 ரூபா தொடக்கம் 500ரூபா வரை வரும்.” “பிள்ளைகளின் கல்விச் செலவை எவ்வாறு ஈடுசெய்கிறீர்கள்” “எனது உழைப்பு மட்டும்தான் குடும்ப வருமானம். அதில்தான் கல்விக்கும் கொடுக்கவேண்டும். மிகச் சொற்ப வருமானத்தை […]
மூன்று வேளை உணவே பெரும் போராட்டம்தான்
1953ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்தவர் அருமைத்துரை மகேஸ்வரி. 1975ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வசிக்க வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு அருகே கச்சான் விற்கும் தொழிலைத் தொடங்கினார். ஜந்து பிள்ளைகள் அவருக்கு. மொத்தக் குடாநாடும் 1995ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தபோது கிளிநொச்சிக்குச் சென்றார். அங்கும் கச்சான் விற்பதே தொழிலானது. யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தும் அதே தொழிலைத்தான் செய்கிறார். இப்போது நான்கு பிள்ளைகள் திருமணம் செய்துவிட்டனர். தற்போது கணவன் மற்றும் தனது ஜந்தாவது […]
யாழ். மத்தியபேருந்து தரிப்பிடத்தை கடந்து மின்சாரநிலைய வீதி வழியாக நடந்து கொண்டிருந்தேன். வீதி ஓரத்தில் காணப்பட்ட “பெண்கள் ஆட்டோ தரிப்பிடம்’’ என்னும் மும்மொழிகளிலமைந்த பெயர்சுட்டுப் பலகை எனது கவனத்தை ஈர்த்தது. நான் சென்ற நேரத்தில் ஆட்டோ தரிப்பிடம் என்னும் பெயர் சுட்டுப் பலகைதான் அந்த இடத்திலிருந்ததே தவிர முச்சக்கரவண்டி எதுவும் இல்லை. ஐந்து நிமிட இடைவெளியில் முச்சக்கரவண்டி ஒன்று அந்த இடத்தில் வந்து தரித்தது. சாரதி ஆசனத்தினை பெண்மணி ஒருவர் அமர்ந்து அழகு செய்தார். குறுந்தூரப் […]