Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இந்த பஸ்சில எல்லா ஆக்களும் பேறாங்க வாராங்க நான் தினமும் சாப்புடுற சாப்பாட்டில சிங்களவங்க மட்டும் குடுக்குற காசு இல்ல. தமிழ் ஆக்கள், முஸ்லிம் ஏன் சில சமயம் வெள்ளக்காரனும் தார காசு இருக்கு…..

15.08.2018

ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்த சலுகைகள், வசதிகள், அந்தஸ்து திருப்திகரமாக இருக்கின்றது. ஆனால் …..

06.08.2018
பம்பலப்பிட்டி கரையோரக் குடிசைகள்:

குழந்தைப்பராயத்தை அனுபவிக்க வழியில்லை!?

குடும்பத்தால், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக கடலின் விளிம்பில் தமது வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள்தானா? ‘

23.07.2018

“ஏறத்தாள 49 வருடங்களுக்கு முன் நான் எனது தந்தையுடன் சிறுவனாக இங்கு குடியேறினோம். அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் இந்த எட்டுக்கு எட்டு அளவுடைய அறை தான் எம் வீடு.”

19.07.2018

‘தற்கொலை செய்து மரணம் சம்பவிப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களே அதிகளவினராக உள்ளனர். ஆனால் தற்கொலை முயற்சியில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.

18.07.2018

“நான் ஒரு பெண் என்று உணர தொடங்கியதும் தோற்றத்திலும் மாற்றிக் கொள்ள முயன்றேன். அதற்கு தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் உள்ள 10ம் இலக்க சிகிச்சை அறையில் எடுத்து கொண்டேன்.

14.07.2018
அருகி வருவதோடு அழியவும் தொடங்குகிறதா மட்பாண்டத் தொழில்?

எங்கட தொழிலை அழியவிடாம காப்பாத்தினா காணும் அருகி வருவதோடு அழியவும் தொடங்குகிறதா மட்பாண்டத் தொழில்? “நான் இப்ப நாலாவது தலைமுறை. எங்கட பரம்பர பரம்பரயா செய்துவாற தொழிலை விட ஏலுமே மற்றாக்கள் கனபேர் இந்தத்தொழிலை விட்டிட்டு வேறவேற தொழில் செய்யின எங்களுக்கு மனங்கேக்காம இப்பயும் இதைச்செய்துகொண்டிருக்கிறம் அதுக்கும் இப்ப பிரச்சனையாக்கிடக்குது” என பானைசெய்யும் சக்கரத்திற்கீடான வேகத்தோடு பேசத் தொடங்கினார் கல்வியங்காட்டைச்சேர்ந்த ரவிக்குமார் ரத்தினவள்ளி. / அண்மைக்காலங்களில் மட்பாண்டத்தொழிலில் இடம்பெற்றுவரும் நெருக்கடி தொடர்பில் கேட்டறிவதற்காக பல வருடங்களாக மட்பாண்டத் […]

01.07.2018

“இப்ப சிங்கள ஆக்களில கண்டியன் ஆக்கள் மாப்பிள்ளை மாலையும், மணப்பெண்ணுக்கு தலைக்கு வைக்க பூ மாலை வைக்கிறதும் பழக்கமாகியுள்ளது. முந்தி எல்லாம் அப்பிடி செய்யிறதில்லை. அதனால அவர்களும் (சிங்கள ஆக்களும்) தேடி வந்து ஓடர் தந்துட்டுப் போறாங்க.

22.06.2018

ஒரு தையல் மெசினோடுதான் இந்தக் கடையை நான் ஆரம்பித்தேன். இன்று கடையில் 4 மெசின் அளவில் உள்ளது. அத்தோடு 3 பேர் என்னோடு வேலைசெய்கிறார்கள்.
அப்போதுதான் தெரிந்தது, இவரது கடையில் வேலை செய்பவர்களில் இரண்டு பேர் அவரைப் போன்று….

11.06.2018
கோப்பாய் சிறீஸ்கந்தராஜா நம்பிக்கையின் அடையாளம்

வாழ்க்கையே ஆயுதம்

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ,கோபம்கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் தொடங்கினால் வாழ நேரம் கிடைக்காது” என்கிறார் மாமேதையான மாற்றுத் திறனாளி ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்.அப்படி தன்னுடைய குறையை நினைத்து முடங்கிப்போகாமல் வாழ்க்கையோடு போராடி தனக்கான பாதையை உருவாக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார் கோப்பாயைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறீஸ்கந்தராஜா. தனது முச்சக்கர வண்டியில் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள், கோவில் பூஜைக்கான பொருட்களை விற்பனை செய்துவரும் […]

09.06.2018

இலங்கை அபிவிருத்தியை நோக்கி நகர்வதோடு காடுவளர்ப்பும் நடைபெறுகின்றது. அனாலும் யானைகள் அவற்றின் வாழ்விடங்களை மாற்றி வேறிடங்களுக்கு நகரும் அபாயம் தொடர்கின்றது. இந்த நிலையைத் தடுக்க அதிகாரிகளால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்று உள்ளுர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். “அவள் யானைகளால் கொல்லப்படவில்லை இந்த நாட்டு தலைவர்களால்” என்பதாக எதிர்ப்பு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பதாதையில் எழுதப்பட்டுள்ள வாசகம் கூறுகின்றது. விடயம் என்னவென்றால் இலங்கையில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடு நாட்டில் பல பிரதேசங்களில் நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்ற […]

01.05.2018

அந்தப் பிரதேசம் மிகவும் செழிப்பானதாக இருப்பதோடு உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் அழகானதுமாகும். சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் அவர்களது இந்தக் காணிகள் இராணுவ கட்டப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டவைகளாகும்.

18.03.2018
சர்வமத சரஸ்வதி

மதம் என்பது மனம் தான்!

“பொய் சொல்லமாட்டேன், எவ்வளவு பசி எடுத்தாலும் சாப்பாடு தாங்கன்னு கேட்கவும் மாட்டேன், சலிக்காமல்; வேலை செஞ்சிட்டே இருப்பேன்… இதனாலயே என்னை எல்லோருக்கும் புடிச்சிடும்… யாரும் வெறுக்கமாட்டாங்க. ரொம்ப வயசுக்குப் பிறகுதான் கலியாணம் முடிச்சேன். புருசன் பேரு பொடி அப்பு ஆமி-சிங்களவர். துப்புரவுத் தொழிலாளியா வேலை பார்த்தாரு. …..

21.02.2018

திருமணச்சடங்கை எந்த மதத்தில் நடத்துவது என்று ஒரே சண்டை. எனது காதலன்தான் “நான் கிறிஸ்தவனாகிறேன்” என்று சொல்லி இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

21.02.2018

யாழ்ப்பாணத்தின் யாழ் மாவட்டச்செயலக சுற்றுவட்டாரப் பிரதேசம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. செயலகத்தின் முன்வாயிலருகில் கூடாரம் அமைத்து போராடிக்கொண்டிருக்கின்றனர் வேலையில்லா பட்டதாரிகள். A9 பிரதான வீதியில் வாகனங்கள், பயணிகள், மாணவர்கள், மக்கள் என சாரைசாரையாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். வலப்பக்கமாகச் செல்லும் கச்சேரி நல்லூர் வீதியின் கரையோரமாக வரிசையாக காத்திருக்கின்றனர் படிவங்கள் நிரப்பும் தொழிலைச்செய்யும் தொழிலாளர்கள். கைளில் நாலைந்து பைல்கள், பேனை சிலரிடம் தட்டச்சுச்செய்யும் இயந்திரம் இவையே இவர்களது ஆகக்கூடிய தொழிலுக்கான உபகரணம். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கிடைக்கும் மரநிழலில் ஒரு கதிரையைபோட்டு […]

21.02.2018
மாற்றுத் திறனாளி விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்

தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

  “பாடசாலை பருவத்தில் களுவன்கேணி கடலில் குளிப்பதற்காக சென்றவேளை கடலில் மிதந்து வந்த வட்டமான மர்மப் பொருளை எடுத்து பிரித்து பார்த்தபோது அம்மர்ம பொருள் வெடித்து சிதறியதில் எனது இரு கைகளும் சிதறின. அன்றுமுதல் இன்றுவரை இரண்டு கைகளும் இல்லாமலேயே நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனது வேலைகளை நானே செய்து வருகிறேன் மோட்டார்சைக்கிள் ஓட்டுவேன் பிறரின் உதவி நாடியதில்லை. எனது தன்னம்பிக்கை காரணமாக சொந்த காலில் என்னால் நிற்க முடிகிறது.” ஏன்கிறார் இரண்டு கைகளையும் இழந்த மீன் மொத்த […]

20.02.2018