மாஸ்டர் ஹக்கின் கதை
கலையில் ஒன்றிணைந்த சிங்கள முஸ்லிம் உறவு இன்றும் கௌரவத்திற்குரியது!
கருணாரத்தன அபேசேகரவுடன் இணைந்து கொண்ட ஹக் ‘கீதா’ திரைப் படத்திற்கான “தகின தசுன” என்ற பாடலை எழுதிப் பாடினார். அந்தப் பாடலின் இனிமையால் மயங்கி காதலியாக மாறிய பெண்ணே பின்னர் அவரது வாழ்க்கைத் துணைவியாகவும் மாறினார்.
‘சிங்களவர்கள் மிகவும் நல்லிணக்கத்துடன் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.’ கலகெதரையைச் சேர்ந்த ஹக் என்பவர் ஒரு பாடலாசிரியராக அவரது பழைய வாழ்க்கையின் இனிமையை ஞாபகப்படுத்துகின்றார். மூத்த முஸ்லிம்கள் கலையின் முக்கியத்துவத்தை உணரவில்லை. ஆனாலும் கலைகளில் குறிப்பாக பழைய சினிமாப் பாடல்கள் எப்போதும் உள்ளங்களை கவரக் கூடியவைகளாக உள்ளன என்பதை நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
“இறைவனின் அருட் கொடைகளில் இசை மிகவும் முக்கியமானதாகும், இனிமையானதுமாகும். அது எவ்வாறு சாத்தியப்படும் என்பது எனக்கு தெரியாது. என்னால் ஒரு போதும் இசையை கற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நான் நல்ல முறையில் ஆங்கிலத்தை கற்றுள்ளேன்” என ஹக் அவரது கதையை ஆரம்பித்தார். அவர் வெலிமடை குருதலாவையில் பாடசாலையொன்றில் இசையை கற்பிக்கும் ஆசிரியராக பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது ஓர் அழகிய பெண் அவரது கலையில் மயங்கிவிட்டாள். அடிக்கடி அவர் தமிழில் பாட்டுப் பாடக்கூடியவராகவும் இருந்தார். ‘பறந்தோடும் நிலவில் கண்டேன் பாவை உன்னையடி’ (வானத்தில் பரந்து திரியும் சந்திரனில் நான் உன்னைக் கண்டேன்) என்ற பாடலின் உவமானம் மிகவும் இனிமையானதாகும். அந்த பாடலின் அடிகளை அவர் இன்னும் நினைவில் வைத்திருப்பதோடு அவர் எவ்வாறு அந்தளவிற்கு கலையில் திறமை மிக்கவராக மாறினார் என்பதை அவராலே நம்ப முடியவில்லை.
என்னால் ஒரு போதும் இசையை கற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும்
உண்மையாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த கருணாரத்ன அபேசேகர என்பவர் ஹக்கின் படைப்புக்களை மொழி பெயர்ப்புச் செய்து, பாடகர் எச்.ஆர். ஜோதிபாலவால் இனிமையான குரலில் பாடப்பட்டு மக்களின் காதுகளுக்கு இன்றும் இனிமையை ஏற்படுத்தக் கூடியவைகளாக அவை உள்ளன. பின்னர் ஹக் யாழ்ப்பாணம் சென்ட் ஜோன் கல்லூரியில் அங்கில ஆசிரியராக நியமனம் பெற்று இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதற்கடுத்ததாக ஓய்வுபெறும் வரையில் பலாலி ஆசிரிய பயிற்சி கல்லூரியில் கற்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு அங்கு அவர் கடமையாற்றிய காலத்தில் அவருடன் ஜே. தேவ்ஆனந் என்ற திரைப்படத் தயாரிப்பாளரும் அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரது இரண்டு மாணவர்களே 16 மி.மி. திரைப்படத்தை தயாரித்தவர்களாவர்.
சென்ட் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஹக்கை பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு அழைத்து பாட்டுப்பாடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர் முதல் சில அடிகளை பாடிக்கொண்டே குருதலாவையில் கற்பித்த காலத்தை நினைவுபடுத்தினார். “எனது நண்பர்கள் இசையை எங்கிருந்து கற்றுக்கொண்டதாக கேட்கின்றனர். நான் அவர்களுக்கு கூறினேன் அது எனது சொந்த முயற்சி என்று. அப்போது அவர்கள் என்னை, ஆனந்தை போய் சந்திக்குமாறும் அவருக்கு ஒரு திரைப்படத்திற்கு பாடல் பாட வேண்டும் என்றும் கூறினர். இவ்வாறுதான் நான் ஆனந்தை சந்தித்தேன். ஆரம்பத்தில் ஹக்கிற்கு சிங்களம் தெரியாது. அவர் தமிழ் மொழியிலே பாடல்களை இயற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரால் எழுதப்படுகின்ற தமிழ் பாடல்களில் சிங்கள சொற்களை புகுத்தி எழுதுவது அப்போது ஒரு வழக்கமாக இருந்து வந்தது. எனவே அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் இசைக்கு ஏற்ற தாளமும் எதுகை மோனையும் தேவையாக இருந்தது.
பிற்காலத்தில் ஆனந் கொழும்பில் ‘கார்கில்’ இல் வேலை செய்துகொண்டு ‘கீதா’ என்ற சிங்கள திரைப்படத் தயாரிப்பிலும் இணைந்து கொண்டார். அந்த திரைப்படத்திற்கு பின்னணி பாடல் அமைத்து தேவையான இசையை வழங்குவதற்காக ஹக்கிற்கும் அழைப்பு விடுத்தார். கருணாரத்தன அபேசேகரவுடன் இணைந்து கொண்ட ஹக் ‘கீதா’ திரைப் படத்திற்கான “தகின தசுன” என்ற பாடலை எழுதிப் பாடினார். அந்தப் பாடலின் இனிமையால் மயங்கி காதலியாக மாறிய பெண்ணே பின்னர் அவரது வாழ்க்கைத் துணைவியாகவும் மாறினார். மாதொட்டையில் நடைபெற்ற அவர்களது திருமண வைபவத்திற்கு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தனாவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். திருமணம் அவர்களது வாழ்க்கையின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை. இன்றும் பாடல் இயற்றும் தொழில் முறையாக அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
‘கீதா’ என்ற திரைப்படத்தின் பின்னர் ‘சுஜீவா’ என்ற புதிய தயாரிப்புடன் இணைந்து கொண்டார். ‘கீதா’ திரைப்படத்திற்கான பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமைந்ததால் அவருக்கான அடுத்த அழைப்பு கிடைத்தது என்றே கூறலாம். அந்தப் புதிய திரைப்படத்திற்கும் பாடல் இயற்றுமாறு ஹக் கோரப்பட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அவரது சின்ன மகளின் விளையாட்டுக்களையும் ரசித்தவாறே ஹக் பாடல் இயற்றும் வேலைகளையும் செய்து வந்தார். ஒரு நாள் மாலை நேரத்தில் ஹக் அவரது மகளை மடியில் வைத்துக் கொண்டு பத்திரிகையை படித்துக் கொண்டிருந்த போது அந்த குழந்தை அவரது மார்பில் சாய்ந்தவாறே நித்திரை கொண்டு விட்டது. அவ்வாறு உறக்கத்தில் இருந்த குழந்தை திடீர் என்று அதிர்ந்து போய் எழுந்து கொண்டது. ஹக் அவரது அடுத்த திரைப்படத்திற்கான பாடலை அந்த புதிய உணர்வுகளையும் சேர்த்ததாக இனிமையான ராகத்தில் பாடும் வகையில் இயற்றினார். அதில் சில வரிகளில் அவரது சிந்தனை இந்தியில் உள்வாங்கப்பட்டிருந்தது. எப்போதும் இந்தி மொழியின் வரிகளில் மேலும் பாடலுக்கு சுவை நயம் அதிகரிக்கச் செய்வதிலும் ஒரு தனித்துவம் காணப்பட்டது. திரைப்படத்தின் இயக்குனர் குணரத்தினம் கூட அந்த பாடலை இவ்வளவு பிரபலியமாகும் என யோசித்திருக்கமாட்டார்.
அதுவரையில் 17 வருட காலமாக ஒரு திரைப்படம் சாதித்திருந்த வெற்றி சாதனையை முறியடித்து அந்த திரைப்படம் 100 நாட்கள் வெற்றித்திரைப்படமாக ஓடியது. அந்த திரைப்படத்தை பலர் மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவிற்கு ஹக்கின் பாடல்கள் அந்த நிரைப்படத்திற்கு இனிமை, ரசனை, கவர்ச்சியைக் கொடுத்தது. அதனால் தயாரிப்பாளர் நிறைய பணம் சம்பாதித்ததால் ஹக்கிற்கும் அவரது பாடலுக்காக அன்று 500 ரூபா கொடுக்கப்பட்டதை மிக்பெரும் பெறுமதியாக மீட்டுகிறார். அன்றைய சாதாரண வாழ்க்கையின் யதார்த்தத்தை அவர் மீட்டுப்பார்க்கின்ற போது திரைப்படத் தொழிலையும் அதில் பாடல் இசைத்ததையும் மறக்க முடியாது என்று கூறுகின்றார் ஹக் மாஸ்டர்.
ஹக் மீண்டும் நாவலப்பிடி கதிரேசன் இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஒரு நாள் வெள்ளிக் கிழமை 11.00 மணியளவில் மாத்தறையில் உள்ள அவரது மனைவியை பார்ப்பதற்காக புகையிரதத்தில் பயணம் செய்யும் போது ஒரு காட்சியைக் கண்டார். உலப்பனையில் அமைந்துள்ள தேயிலைத் தோடத்தின் படிக்கட்டுகளில் ஒரு சிறுமி நடந்து கொண்டிருந்த காட்சியே அது. அந்த சந்தர்ப்பத்தில் அவரது உள்ளத்தில் ஒரு இனிமையான பாடலுக்கான வரிகள் வெளிப்பட ஆரம்பித்தன. “ பென பென என சந்த பாயா கெட்ட பெல திகே” (பாய்ந்து பாய்ந்து வரும் சந்திரன் வீட்டு படிகளின் ஊடே) என்ற பாடலே அது. இந்தப் பாடல் ஜோதிபாலவின் இசையமைப்பில் கொழும்பில் அமைந்துள்ள ஒரு கலையகத்தில் 20.000 ரூபா செலவு செய்து இசையமைத்து பாடப்பட்டு நாடாக்களிலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
“தகின தசுன” என்ற பாடலின் காரண கர்ததாவாக இருந்த மனைவி அவரைவிட்டு பிரிந்தபின் அவர் தேவதாஸ்போல் ஆகிவிட்டார். இன்று அவர் கற்பனை உலகில் சஞ்சரிந்து வாழ்பவராக தன் மனைவியின் நினைவுகளுடன் வாழ்பவராக உள்ளார். ஆனாலும் அவரது தகின தசுன பாடல் இலங்கை மக்களின் மனதில் இன்றும் நிறைந்திருக்கிறது. இசையையும் பாடல்களையும் ஆசையுடன் ரசிக்கும் உள்ளங்களில் இச்த ஹக் என்ற மனிதனும் நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாh.;