அன்றைய நாள்…
பிரச்சினைகளின் போது அச்சமடைதல் நிலைமையை மோசமாக்கும்.!
செய்தி கிடைத்தவுடனே நாங்கள் பூசையை நிறுத்திவிட்டு மக்களை வீடு திரும்பும்படி கேட்டுக்கொண்டோம். அதனைப் பொருட்படுத்தாது தேவாலயத்தினுள் இருந்த மக்கள் எங்களை அங்கே விட்டுச் செல்ல விரும்பவில்லை. இறுதியில் பாதுகாப்புப் படையினரே அவர்களை….
‘நாங்கள் அமைதியுடன் ஒன்றாக வாழ்ந்தோம். குறுகிய மனம் படைத்தவர்களின் தனியொரு தீவிரவாதச் செயல் எங்களைக் கடுமையான சிரமங்களுக்கு ஆளாக்கியுள்ளது’ என்று மாத்தறை மின்னித்துல் பஸ்ளியா அரபுக் கல்லூரி ஆசிரியர் மௌலவி எம்.ஹிஸாம் அல் பாஸி கவலை தோய்ந்த குரலில் கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வெறுப்பேற்றும் பேச்சுகளினால் ஏற்பட்ட கவலை அவரது முகத்தில் பிரதிபலித்தது.
“இந்தத் தீவிரவாதிகளின் செயல்கள் எங்களுக்கும் எங்கள் சிங்கள சகோதரர்களுக்கும் இடையில் ஒரு பெரிய பிளவினை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நாங்கள் வருத்தமும் மனக்கவலையும் அடைந்துள்ளோம். நாங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தோம். நாங்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியில் வரும் வேளைகளில் மகிழ்;ச்சியும் புன்முறுவலும் நிறைந்த முகங்களைச் சந்திப்போம். ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னர் மக்கள் தங்கள் முகங்களை வேறு திசைக்குத் திருப்பத் தொடங்கிவிட்டனர். நாங்கள் பேரூந்தில் ஏறி அமர்ந்தவுடன் எமது அருகிலிருந்தவர்கள் எழுந்து தூர விலகிச் செல்கின்றனர். இளவயது ஆண்கள் எங்களை ஐஎஸ் என அழைக்கின்றனர்” என்று அந்த முஸ்லிம் மதகுரு கண்ணகளில் கண்ணீர் வடியக் கூறினார்.
அவர் தனது கண்ணீரைத் துடைக்கையில் தென் மாகாண அமரபுர தருமரக்சித்த நிக்காயவின் உதவி நிலை பிரதம சங்கநாயகர் வண. அங்குண்ணபாடுல்லே ஞானதாச தேரர் தனது குரலைக் காட்டினார். ‘இது சாதாரண மக்களின் இயல்பு. இவ்வகையான பிரதிபலிப்பு இவருக்கும் இவருடைய சமூகத்திற்குமென மட்டுப்படுத்தப் பட்டதல்ல. ஏனைய சமூகங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களின் பிரதிபலிப்பின் போதுங்கூட இதே மாதிரியான நடத்தையை நாங்கள் கண்டிருக்கிறோம். இது சாதி சமயம் என்பவைக்கு அப்பால் ஒரு வழமையான விடயம். ஆனால் உண்மையைப் புரிந்துகொண்டதும் மக்கள் மாறிவிடுவார்களென்பதை நாங்களும் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை விழிப்படையச் செய்ய நாங்கள் ஒன்று சேர்வோம். அது இந்தப் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை வழங்கும்.’
உண்மையைப் புரிந்துகொண்டதும் மக்கள் மாறிவிடுவார்களென்பதை நாங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவருடைய மதத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்காகக் கொலை செய்வது நியாயமா? என வினவியபோது, தீவிரவாதத்தைப் புறந்தள்ளிவிட்டு நல்லிணக்கத்திற்கான பாதையில் மீண்டும் பயணிக்க வேண்டிய அவசியம் பற்றி மௌலவி ஹிஸாம் குறிப்பிட்டார். அன்றைய தினம் சிங்கள மக்களின் மனம் இதில் சிக்குண்டது. ஆனால் இப்பொழுது அவர்கள் உண்மையைப் புரிந்து விட்டனர். தற்கொலையை அல்லது கொலையை இஸ்லாம் ஆதரிப்பதில்லை. எங்களுடைய 100 வருடப் பாரம்பரியத்தைக் கொண்ட வாழ்வை நாம் அழிக்கக்கூடாது. தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்.
‘நாங்கள் ஒரு தாய் மக்கள் போல வாழ்ந்தோம். கையளவான தீவிரவாதிகளின் செயல் ஒன்று எங்கள் ஒற்றுமையைச் சீர்குலைத்துள்ளது. எல்லா முஸ்லிம்கள் மீதும் நாம் குற்றம் சுமத்தக் கூடாது. நாங்கள் அவ்விதம் நடந்தால் நாட்டின் முன்னேற்றம் பாதிப்படையும்.’ வண. மல்கம் கார்தினல் ரஞ்சித் மிகவும் முன்மாதிரியாகவும் போற்றத்தக்கவகையிலும் நடந்து தனது சமூகத்தை அமைதியாக இருக்கச் செய்தார்.
‘நாங்கள் இவ்வாறான பாடங்களைக் கைக்கொண்டு அனாவசியமான பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கென எமது தீர்க்கதரிசிகள் போதித்த பாதையைப் பின்பற்ற வேண்டும்’ என வண. அங்குண்ண பதுல்ல ஞானதாஸி தேரர் போதனை செய்தார்.
மாத்தறையிலுள்ள எமது அன்னையர் கோவில் நிருவாகி அரு. தந்தை மைக்கல் கொலின் தவறான ஊடக அறிக்கைகள், வெற்றுப் பேச்சுகள் மற்றும் வெறுப்பூட்டும் அறிக்கைகள் காரணமாகத் அவர் அனுபவித்த மனஉளைச்சலை விபரித்தார்.
இத் துரதிருஸ்டமான சம்பவம் நிகழ்ந்தபோது 1500 வரையானோர் எங்கள் தேவாலய பூசையில் கலந்து கொண்டிருந்தனர். இச் செய்தி கிடைத்தவுடனே நாங்கள் பூசையை நிறுத்திவிட்டு மக்களை வீடு திரும்பும்படி கேட்டுக்கொண்டோம். அதனைப் பொருட்படுத்தாது தேவாலயத்தினுள் இருந்த மக்கள் எங்களை அங்கே விட்டுச் செல்ல விரும்பவில்லை. இறுதியில் பாதுகாப்புப் படையினரே அவர்களை வீடு செல்லும்படி கூறவேண்டியிருந்தது.
‘சுவாமி, நாங்கள் சுனாமியின்போது இடம்பெயர்ந்து இருந்தபொழுது எங்களுக்கு உதவுவதற்காகச் சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவுடன் முதலாவதாக வந்தது இந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த சமூகத்தினரே. இப்பொழுது நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?’ என்று பௌத்த இளைஞன் ஒருவன் தேவாலயத்திற்கு வந்து கேட்டபொழுது மனம் நெகிழ்ந்து போனேன். இது போன்றே ஒரு முஸ்லிம் சகோதரனும் தேவாலயத்திற்கு வந்தார். ஒவ்வொரு வருடமும் எங்கள் வருடாந்தப் பெருவிழாவின்போது இந்த மக்கள் எங்களுக்கு உதவி செய்வார்கள். இதுவே நல்லிணக்கம்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் குழுக்களாக இந்தத் தேவாலயத்திற்கு வருகை தந்து தங்கள் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தினர். அவர்கள் எல்லோருடனும் உரையாடிக் கொண்டிருந்தபடியால் மதிய உணவையும் மறந்து விட்டேன். அந்த அளவிற்கு அது ஒரு உணர்வுபூர்வமான வேளையாக அது இருந்தது. நாம் பயந்து கலவரமடையக்கூடாது. அச்சமடைதல் பிரச்சனைகளை மோசமடையச் செய்யும். மதப் பிரிவினைகள் பற்றிக் கருத்திலெடுக்காது, கடந்த காலத்தில் நாம் ஒற்றுமையாக இருந்தது போல வாழ்வதற்கு நாங்கள் முனைய வேண்டும்.