பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர
“நாம் அவர்களது நினைவுச் சின்னங்களை அழித்ததால் அதிருப்தியை தேடிக் கொண்டோம்”
எதிரியின் கடந்த கால நினைவுகளை பாதுகாக்க எமக்கு தேவை இருக்கின்றது. துட்டகைமுனு மன்னர் அவ்வாறு செய்தார். துட்டகைமுனுவிற்கும் எல்லாள மன்னனுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தையும் எல்லாள மன்னனின் மறைவையும் நாம் மறந்துவிட்டோம். துட்டகைமுனு மன்னன் எல்லாளனை நினைவு கூற தூபியொன்றை அமைத்ததை நாம் எமது சந்ததியினருக்கு கற்பிப்பதற்கு மறந்துவிட்டோம்.
பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர இலங்கையின் கலைத்துறையில் பெயர் பதித்த ஒரு சிறந்த கலைஞார் ஆவார். அவரது கலைத்துறை மற்றும் சமூக அடிப்படையிலான வெளிப்பாடுகளும் பங்களிப்பும் இலங்கையின் இனங்களுக்கிடையிலான ஒரு இணைப்பையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வழிவகுத்திருக்கின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சந்ததியினருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்த 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்குமாறு அவர் இலங்கை மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார்.
த கட்டுமரன் : ஒரு கலைஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்ற வகையில் கறுப்பு ஜூலை பற்றி ஏன் பேச வேண்டும்?
1983 ஆம் ஆண்டு நான் எனது பல்கலைக்கழக கல்வியை முடித்துவிட்டு கொழும்பில் ஒரு பகுதிநேர தொழிலை செய்து கொண்டிருந்தேன். கறுப்பு ஜூலை எனது கண்களின் முன்னாள் நிகழ்ந்த சம்பவமாகும். அதனை தடுப்பதற்காக எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை. பின்னர் நான் வெளிநாட்டில் உயர்கல்வி கற்றுக் கொண்டிருந்த போது அந்த நிகழ்வின் வடுக்களாக எனது உள்ளத்தில் பதிவாகி இருந்தவைகளை கலை மூலம் வெளிப்படுத்தினேன். 1988 மற்றும் 1989 காலப்பகுதியின் நடைபெற்ற மோசமான சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 1983 கருப்பு ஜூலையானது மிக மோசமான இன சுத்திகரிப்பாகும். பிற்காலத்தில் கருத்து வெளிப்பாட்டு ஊடகமாக நான் புதிய கோணத்தில் கலைத்துறையை பரிணாம மாற்றத்திற்கு உட்படுத்தினேன். அதில் இருந்து ஒவ்வொரு வருடமும் நான் எனது கலை வெளிப்பாட்டின் ஊடாக அதனை எனது கடப்பாடாக கருதி இனி ஒருபோதும் அப்படியான கசப்பான அனுபவம் நிகழக்கூடாது என்ற அடிப்படையில் உணர்த்தி வருகின்றேன்.
சில நிகழ்வுகளை பகிரங்கமாக நினைவு கூற முடியாது. ஆனாலும் அதைப்பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்திக் கொண்டேன். இறந்த மனிதனையும் இரத்தத்தையும் ஓவியம் மூலம் காட்ட முடியாது. நடந்த நிகழ்வின் அடிப்பகுதியில் உள்ள உண்மையான விடயங்கள் வெளிப்படுத்தி காட்டப்பட வேண்டும். யுத்த காலப்பகுதியில் எனது தீர்வாக அமைந்தது ஒரு இராணுவ தீர்வை நோக்கியதாகும். அதனால் நான் தமிழ் தேசியவாத ஆர்வமுடைய ஒருவனாக காட்டப்பட்டேன். சில சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குமார் அவர்களாகவே யுத்தத்தை பிரகடனப்படுத்திய போது நான் எனது உண்மையான பௌத்தவாத நிலைப்பாட்டை தம்மபதவின் அடிப்படையில் கண்காட்சியாக வெளிப்படுத்தினேன். நான் அதற்காக சில சந்தர்ப்பங்களில் அரசியலை தெரிவு செய்து அதன் கருத்துப் பரிமாற்ற வழிகள் ஊடாக தீவிவரவாத்தின் மோசமான விளைவுகளைப் பற்றியும் இன வன்முறைகளின் பாதிப்புக்களைப் பற்றியும் சிந்திக்குமாறு மக்களை தூண்டினேன்.
த கட்டுமரன் : கலந்துரையாடல்களின் போது காணும் விடயம் சில வகையான சமூக ரீதியான அழிவுகள் மறக்கப்பட்ட நிலையை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான ஒரு நிலையில் உங்களது திட்டங்களை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வீர்கள்?
சில நிகழ்வுகள் மறக்காத நினைவுகளாக சிந்தனையில் பதிவாகி இருக்க வேண்டும். அவ்வாறே சில நினைவுகள் நினைவுகூறத் தகாதவைகளுமாகும். நாகரீகமானது சிறந்த ஞாபக சக்தியை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல. சில சந்தர்ப்பங்களில் ஒரு சில அழிவுகளும் எமது முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்துள்ளன. உதாரணமாக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் அழிவுகளை நினைவு வைத்து ஒரு இனக்குழுவை நசுக்குவதற்காக பயன்படுத்த முடியுமா? நாகரீகமானது சில வகையான நினைவுகளை சேமித்த வகையில் சில காரணங்களுக்காக அவற்றை பாதுகாத்து வைத்ததாக உள்ளன. அவை நல்ல மற்றும் மோசமான தாக்கத்தை பிரதிபலிப்பவையாக உள்ளன. அதனால் சில மோசமான விளைவுகளின் பதிவை நாம் மீண்டும் நினைவுபடுத்தி அது போன்ற அழிவுகள் இனி ஏற்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறே நல்ல பதிவுகளை நினைவுபடுத்தி அவற்றை மீண்டும் தொடர உத்வேகம் அளிக்கலாம்.
இலங்கையின் சில பதிவுகள் அரசியல் தேவையின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிமையானவைகளாக உள்ளன. அதன் பின்னர் அவை அரசியல் இலக்கை அடைய பயன்படுத்தப்படுகின்றது. “அஹின்சகயாகே ஆராமய” அல்லது அப்பாவியின் ஆலயம் என்ற படைப்பு இதற்கு நல்லதொரு உதாரணமாகும். அது ஒரு மிக மோசமான முடிவின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.
சுpல வகையான தலைவிதிகள் பிரதிபலன்கள் அல்லாவிட்டாலும் சில மனிதர்களது வாழ்வில் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. ஆனாலும் அவை ஒரு இலக்கை நோக்கமாகக் கொண்டவையாகும். எனது “அஹின்சகயாகே ஆராமய” என்ற படைப்பில் நான் கலையைக்கூட எதிர்த்து விமர்சித்துள்ளேன். நீண்ட காலமாக அறிந்த ஒரு விடயமான சூரியகந்தையை ஞாபகார்த்தமாக பதிவிடுமாறு சந்திரிகா என்னை கேட்டார். அவ்வாறு பதிவிட்டிருந்தால் அழிவின் நினைவாக அது இருந்திருக்கும். சில சமயங்களில் அரசாங்கம் கூட அரசியல் குறிக்கோளின் அடிப்படையில் சிலவற்றை உருவாக்க கோருவது வழக்கமாகும். அஹின்சசகயாகே ஆராமயவின் தாக்கத்தை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆனாலும் அவை அடுத்து வரும் தலைவர்களுக்கு ஒரு படிப்பினையாக வைத்திருந்தால் அவர் மக்கள் நலனில் அக்கரை செலுத்தி சமூக மேம்பாடு, சமூக நலன் உட்பட பல விடயங்களை கவனத்தில் எடுத்து செயல்படக்கூடியதாக இருக்கும்.
பிரச்சினை எதுவெனில் மக்கள் ஏன் மறந்து விடுகின்றார்கள் என்பதே? அந்த கலைஞர் எங்கே? அவர் யாருக்காக பேசுகின்றார் என்பது எமக்கு இப்போது பிரச்சினையாக இருக்கின்றது. அதனால்த்தான் கலைஞர்கள் அரசாங்கத்தின் கையாட்களாகக் கூடாது என்ற விடயம். 2006 ஆம் ஆண்டு முதல் என்னை பாதித்த பல விடயங்களை அடிப்பயைடகாக் கொண்டதே எனது கலை வெளிப்பாடுகளாகும். சுயாதீனாமாக செயற்படும் ஒரு கலைஞர் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை தவிர்க்க முடியாது. அதனால் அவர்கள் மக்களோடு இருக்க வேண்டும். ஆனாலும் பனத்தை இலக்காகக் கொண்ட கலைஞர் எப்போதும் எஜமானை ஒரு நெறியாள்கையாளராக காட்டவே முற்படுகின்றார்.
த கட்டுமரன் : சமூக செயற்பாடுகளால் கறுப்பு ஜூலை நினைவுகள் 35 வருடங்களின் பின்னர் மாற்றமடைந்துவிட்டது அல்லது முற்றுப்பெற்றுவிட்டதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
நான் நினைக்கின்றேன் அந்த காயம் ஆற நீண்ட காலம் செல்லும் என்று. இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து முடிந்து 50 வருடங்களின் பின்னரும் கூட மக்கள் நாசிசவாத அழிவுகளை மனதில் இருத்தி வைத்துள்ளனர். மறக்க முடியவில்லை. இதனை தடுக்க சமூகம் விழிப்படையச் செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் சமூகத்தை மேம்படுத்துவதற்காக கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரது பங்களிப்பு பிரதானமானதாக இருக்கின்றது. முன்னேற்றகரமான சமூகங்களில் இவ்வாறான போக்குகளை தடுப்பதற்காக சிலவகையான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில் அடைந்த வெற்றியானது உண்மையாக பரிணாம மாற்றமாக அமைவதற்கு காரணமாகும் என்று நாம் முழுமையாக கருத முடியாது. நாம் யுத்த வீரர்களை தூக்கிப் பிடிப்பதை மட்டுமே செய்து வருகின்றோம். ஆனாலும் நாய்களை தண்ணீரை நோக்கி இழுத்துச் செல்வதைப் போன்று சில அரசியல் வாதிகள் மூலமாக நாம் அவற்றை செய்ய வேண்டி இருக்கின்றது. காணாமல் போனவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் பற்றி புலனாய்வு செய்வதற்கான கட்டமைப்பொன்று முன்வைக்கப் பட்டிருக்கின்றது. அவர்கள் மக்களது உண்மைகளை கேட்பதற்கு தயாராக இல்லை. பதிலாக நாம் அவர்களது நினைவு சின்னங்களை அழித்து அவர்களது எதிர்ப்பை சம்பாதித்துள்ளோம். நாம் அவர்களை பாதுகாக்க தவறிவிட்டோம்.
எதிரியின் கடந்த கால நினைவுகளை பாதுகாக்க எமக்கு தேவை இருக்கின்றது. துட்டகைமுனு மன்னர் அவ்வாறு செய்தார். துட்டகைமுனுவிற்கும் எல்லாள மன்னனுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தையும் எல்லாள மன்னனின் மறைவையும் நாம் மறந்துவிட்டோம். துட்டகைமுனு மன்னன் எல்லாளனை நினைவு கூற தூபியொன்றை அமைத்ததை நாம் எமது சந்ததியினருக்கு கற்பிப்பதற்கு மறந்துவிட்டோம். தவறான வழியில் பிழையான அணுகு முறைகள் ஊடாக பதவிக்காக போராடும் அரசியல் வாதிகளுக்கு நாம் இதனை உணர்த்த வேண்டும்.
துட்டகைமுனு மன்னன் எல்லாளனை நினைவு கூற தூபியொன்றை அமைத்ததை நாம் எமது சந்ததியினருக்கு கற்பிப்பதற்கு மறந்துவிட்டோம்.
பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் மட்டும் பொதுமானதாக இல்லை. அரசியல் செயற்பாட்டில் கடமைகள் பொறுப்புக்களை நாம் பகிர்ந்தளிக்க வேண்டும். ஒவ்வொரு இனமும் அவர்களுக்கென்ற அதிகாரங்களை பெற்றிருக்க வேண்டும். ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரங்களை வழங்குவதாக கூறினார். ஆனாலும் மறந்துவிட்டார். அரசியல் அமைப்பில் அதிகமான அதிகாரங்களை உட்படுத்தி அமுல்படுத்துவதற்கு யாரும் தைரியமாக முன்வருவதில்லை. பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை பெற்றிருப்பவர்களும் கூட அவர்களது செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதால் அதனை செய்ய முன்வருவதில்லை. நாம் இலங்கை அடையாளம் பற்றி புகழ்பாடினாலும் உண்மையாக அதனை யதார்த்தமாக நடைமுறையில் உறுதிப்படுத்த முற்படுவதில்லை. சிலர் அதற்காக முயற்சி செய்தனர். உதாரணமாக காவி உடையணிந்து பௌத்த பிக்குகளாக வெளித் தோற்றத்திற்கு காட்டுவதற்காக முயற்சி செய்தாலும் புத்தரின் உண்மையான போதனைகளை நடைமுறையில் பின்பற்றுவதில்லை. மக்கள் அவர்களை நேசிக்கின்றார்கள். அவர்களே மதத்தை யுத்தத்திற்காக பயன்படுத்துகின்றனர். எனது கலையில் நான் கலந்துரையாடியுள்ளேன். சில உண்மையான பிக்குமார் கலைக்குள் இடம்பெற்றுள்ள அதனை வரவேற்கின்றனர். சில விடயங்கள் நிறுவன அடிப்படையில் பௌத்தத்திற்குள் நடைபெறுவதில்லை.
த கட்டுமரன் : இந்த வருடம் உங்களது படைப்பில் கறுப்பு ஜூலையின் எத்தகைய விடயத்தை உள்ளடக்குகின்றீர்கள்?
சில விடயங்கள் நினைவுகளாகும். தளர்வுப் போக்கானது ஒரு விடயமாகும். இராணுவ முகாம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான சில இணைப்பை நான் ஏற்படுத்தி யுள்ளேன். எமது சமூகத்தில் காணப்படக்கூடிய அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட தீவிரவாத்தை வெளிப்படுத்தி அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளை வெளிப்படுத்துவதாக இந்த படைப்பு அமைகின்றது. இந்த பிறழ்வு செயற்பாடானது சமூகத்தில் பொதுவாக காணப்படுவதாகும். மோசமான செயற்பாட்டை வெளிப்படுத்த புனிதமான தாமரை சின்னம் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கடியில் சதி நடைபெறுகின்றது. நாம் அவற்றைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும்.
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பிற்பட்ட மற்றும் மே 13 ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்கள் மீண்டும் கறுப்பு ஜூலையை நினைவுபடுத்துகின்றன. நாம் வன்முறை மற்றும் தீவிரவாத கடும்போக்கை மாற்றிக்கொள்ளாத வரையில் மற்றுமொரு நிகழ்வை தடுக்க முடியாது. தீவிரவாதிகள் தொடர்ந்து இனவாத விதையை தூவ முடியும். அவர்கள் இதற்காக தர்மபாலவின் சிந்தனையான அவர் இதன் பின்னர் இந்த மண்ணில் பிறப்பதற்கு விரும்பவில்லை என்ற அடிப்படையிலான தீவிரவாத சிந்தனையின் அடிப்படையில் செயற்படுபவர்களாவர்.
எனது மற்றுமொரு வெளிப்பாடு “செஹெசி ரகுஸோ” ‘சாகச பிசாசு’ என்பதாகும். அது ஒரு கருத்து வெளிப்பாட்டு கலையாகும். பௌத்த தத்துவம் பௌத்தமாக மாற்றமடைந்ததை நான் விளக்குகின்றேன். சில சித்திரங்களும் அதனைப்பற்றி பேசுகின்றன. அதற்கு சமமான கருத்துக்களை வெளிப்படுத்தும் கண்காட்சி ஒன்று ஜூலை 23 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சி லயனல் வென்ட் கலை அரங்கில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகியது. எனது கண்காட்சி அதே தினம் சத்யா பெர்னாண்டோ கலை அரங்கில் நடத்தப்பட ஏற்பாடாகி இருந்தது. அதன் தலைப்பு 13 என்பதாகும்.
இவ்வருடம் கறுப்பு மே யை ஏற்படுத்த திட்டமிட்ட அல்லது முயற்சி செய்தவர்கள் உண்மையாக கறுப்பு ஜூலை அகோரமான நிகழ்வுகளைப் பற்றி அறியவில்லை போலும். எவ்வாறாயினும் மிகவும் மோசமான அழிவு தடுக்கப்பட்தற்காக விவேகமான மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நாம் சமூகம் என்ற வகையில் தோல்விகள் அழிவுகள் மற்றும் நாசகார செயற்பாடுகள் பற்றியதில் இருந்து பிரச்சினையை தோற்றுவிக்க முற்படுவதன் அவசியத்தை தடுக்கும் வகையில் பாடம் கற்க வேண்டும்.
நான் இப்போது ஒரு கேள்விக்கு விடை தேட முற்படுகின்றேன். நான் ஏன் எனது கண்காட்சியை 13 என்று தலைப்பிட்டேன்? அரசியல் அமைப்பிற்கான திருத்தம் ஊடாக 13 ஆவது திருத்தத்திற்கு மேலதிகமாக அதிகாரத்தை பகிர்வதாக கூறியவர்கள் தோள்வி அடைந்தனர். இப்போது அவர்கள் பல திட்டங்கள் மூலம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முற்படுகின்றனர். சிங்கள பௌத்தர்களை பிரதானமாக கொண்ட சமூகத்திலே நாம் செயலாற்ற வேண்டி இருக்கின்றது. சிறுபான்மையினரில் இருந்தான தீவிவரவாத்தை பெரும்பான்மையினர் விமர்சிக்கின்றனர். எமக்கு தீவிவரவாதம் தேவையா இல்லையா என்பதை அவர்கள் முதலில் சிந்திக்க வேண்டும். மதமானது அரசாட்சியில் இருந்து வேறுபடுத்தப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதைத் தவிர மக்கள் தீவிவராத்தை நோக்கி நகர்வதை தடுக்க எமக்கு வேறு வழியில்லை. கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் மக்களை தீவிவரவாதம் மற்றும் மிலேச்சத்தனமான உணர்வுகளுக்கு அடிமையாகி செயற்படுவதை தடுக்க படைப்பாற்றல்களை வெளிப்படுத்த வேண்டும். எமது பொது நலன்கள் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்படும் எந்த திட்டத்தையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். எமது கடந்த கால கறைபடிந்த அனுபவங்களில் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டும்.