Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

“இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அமையப் போவதில்லை. எவ்வாறாயினும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும்தான் பாட வேண்டும் என்று அரசாங்கம் கூறுவதாக இருந்தால் அது தமிழ் மக்களை உதவியற்றவர்கள் என்ற நிலைமைக்கு தள்ளுவதாக அமையலாம்…

22.04.2020

பல அரசியல்வாதிகள் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்பதுமில்லை. அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதுமில்லை. வெறுமனே மேடைகளில் பேசித் திரிவதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. சொல்லப்போனால், அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பெரிய இடைவெளி காணப்படுகின்றது.

20.02.2020

தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னைய தினம் ஒரு மனிதர் தொலைபேசியில் என்னை அழைத்து கட்டுப்பணம் செலுத்த வேண்டாம் என்றும் அந்த முயற்சியை நிறுத்தி அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறும் கேட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்…

13.02.2020

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக நீண்ட காலமாக துயர வாழ்க்கை வாழும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வடக்கை சேர்ந்த மக்களுக்கு தேவையான வ சதிகளை வழங்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விஷேட திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்…

31.01.2020

தனித்துவம் வேறு தனிமைப்படுதல் வேறு என்பதைப் புரிந்து கொண்டு சிங்கள சமூகத்திலிருந்து முற்றிலும் துருவப்படுத்தப்படுவதால் உண்டாகக் கூடிய எதிர்கால அழுத்தங்களையும் ஆபத்துக்களையும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்காலத்தில் சாதுரியமாகக் கையாள வேண்டும்.

05.01.2020

புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக நாங்கள் நாடு முழுவதற்கும் சென்று கூட்டங்களையுமும் சந்திப்புக்களையும் நடத்தி பொதுமக்களது அபிப்பிபராயங்களை திரட்டினோம். எதிர்க்கட்சியின் சில பிரிவினர் இந்த முயற்சியானது நாட்டை பிரிப்பதற்கான முயற்சியாகும் என்று பிரச்சாரம் செய்தனர்…

24.12.2019

எங்களால் ஏனைய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலை இருக்க வேண்டும். அதுவே ஜனாநாயகத்தின் பண்பாகும். ஐக்கியத்தின் ஊடாக ஏற்படும் மத ரீதியான பன்முகத்தன்மை நல்லிணக்கத்திற்கான பாதையாகும்.

23.12.2019

அரசியலமைப்பில் ‘சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்க வேண்டும். தமிழும் ஒரு அரச கரும மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.’ எனத் தெரிவிக்கும் அத்தியாயம் IV ன் 18 வது சரத்தும் மற்றும் ஒரு பிரச்சனையாகும். இதனை ‘சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்’ எனத் திருத்தம் செய்தல் வேண்டும்.

28.11.2019

ஜனாதிபதி தமது பதவியேற்புக்காக தெரிவு செய்த இடமும் முக்கியமானதாகும். எல்லாளனைக்(தமிழ்மன்னன்) கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு (சிங்கள மன்னன்) கட்டிய அநுராதபுர ‘ருவன்வெசேய’ வில்தான் கோட்டாபய தன்னுடைய பதவிப் பிரமாணத்தைச் செய்தார். இத்தெரிவு தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில் கோட்டா தெரிவித்திருந்தார்….

21.11.2019

இழப்பீடுகள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. இனி அதனை வழங்கும் நடவடிக்கை தான் உள்ளது. இந்த நடவடிக்கைகளை நாம் முன் கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக தான் எமது வேட்பளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறுகின்றேன்….

29.10.2019

வேட்பாளர்கள் திடீர் திடீரென தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்கள். அந்தளவுக்கு எமது நாட்டு அரசியல் கலாசாரம் பலவீனமானதாக உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு வேட்பாளர் வருகிறார். பிறகு இன்னொருவர் வருகிறார். அப்படியாயின் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க இந்த குறுகிய காலம் போதுமானதா?

20.10.2019
பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்:

“பெண்களால் அரசியலில் வெற்றிபெற முடியாது!?”

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் அவர்களுக்கு படுதோல்வி. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்தீர்களானால்……

15.09.2019

தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தளபதி நம்பத்தகுந்த அளவிற்கு பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர். இதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. இவரின் நியமனம் தொடர்பாக எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல அமரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறுநாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன….

02.09.2019

புலம்பெயர்ந்து சென்றவர்களும் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன. அதனாலும் நாட்டில் சமாதானத்துக்கான சாத்தியங்களும் குறைந்து கால எல்லையும் நீடித்துக்கொண்டிருக்கிறது….

27.08.2019

அண்மையில்கூட 51 நாள் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சார்ந்திருந்த அரசுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியதனால் ஆட்சி கலைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது….

24.08.2019

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய 10 வருடகால அமைதிச் சூழலில் மீண்டும் ஒருவகையான சமாதானம் இரு இனமக்களுக்கும் இடையே நிலவி வந்திருந்தபோதிலும் இருஇன மக்களிடையேயும் அவநம்பிக்கையும் ஒருவரைப்பற்றி மற்றவரிடையே சந்தேகமும் நிலவி வந்தது…..

10.08.2019