சுற்றுலாத்துறை மீள்கிறது!?
நீர்ச்சறுக்கலுக்கு பிரசித்தி பெற்ற இடமாக அறுகம்பை உள்ளது. உலக நாடுகளிலிருந்து பல வீர, வீராங்கனைகள் இங்கு வந்து நீர்ச் சறுக்கல் போட்டிகளில் பங்குபற்றுவர். இம்மாதம்(செப்ரெம்பர்) 23ஆம் திகதியில் இருந்து 26ஆம் திகதிவரை நீர்ச்சறுக்கல் போட்டிகள் இடம்பெறவுள்ளன….
எனது சகோதரனையும் நான் இழந்துள்ளேன்! இழப்பின் வலிக்கு இனமத பேதம் இல்லை!
இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல நாட்களாயிற்று. இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த உணர்வுக்கு இனம் மதம் மொழி வேறுபாடு என்பதில்லை. இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பழிவாங்குவது நியாயமே இல்லை.
வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வு
“எனக்கு சிங்களம் மட்டும்தான் தெரியும். ஆனாலும் எங்களுடைய கிராமத்தில் அறுவடை செய்யும் சோளத்தை இங்கு கொண்டு வந்து முஸ்லிம், தமிழ் மக்களுக்கு விற்பனை செய்கிறேன். சிங்களம் தெரிந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் என் வியாபாரத்திற்கு உதவி செய்கிறார். “
பொருளாதார வலுவா? வலியா?
“கணவன் மரணித்து விட்டதால் குடும்ப வருமானம் பிரச்சினையாக இருந்தது. அதனால் ஆடு வளர்ப்பதற்கு நிறுவனமொன்றிலிருந்து கடன் தந்தார்கள். அதற்கு நான்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தேன். குளிரினால் இரண்டு ஆடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயிட்டு. ஆனால் கடனில் எனக்கு எந்த தள்ளுபடியும் செய்யவில்லை. முழுக்கடனையுமே கட்டச் சொன்னார்கள்.
படகுகளை நிறுத்த முடியாத துறைமுகம்!
ஒலுவில் துறைமுகம் சுமார் 400 மில்லியன் யூரோ பெறுமதியில் டென்மார்க்கினால் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது .
‘கோழி மேச்சாலும் கவுண்மெந்தில மேய்க்கோணும்’
“அரசு ஆகக்குறைந்தது முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து அங்கு தொழிற்சாலைகளை உருவாக்கினால் அவர்கள் தொழில்களையாவது செய்வார்கள். ஆனால், வெளிநாட்டு முதலீடுகளும் இல்லை, அரச தொழில்களும் இல்லை, தொழில் செய்வதற்கான சூழ்நிலைகளும் இல்லை, அதற்கான கொள்கைகளும் இல்லை, ஆகக்குறைந்தது அவர்களுக்கு கடன்களை கொடுத்து சுயதொழிலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பு வசதிகளும் இல்லை
வடக்கில் இருந்து அகதிகளாக மேற்கு நாடுகளில் குடிபெயர்ந்துள்ளவர்கள் மூலம் கிடைக்கின்ற வருமானம் வடக்கில் உள்ள தனிநபர் வருமானத்தினை உயர்த்துகின்றது.
சனம் அநியாயமா வறுமை நோய் எண்டு செத்து போகுதுகள்…..
ஒருநாள் கூலி 1000 ரூபா. அதில், 600 ரூபாவை மதுவிற்கு செலவழித்துவிட்டு 400ரூபாவை வீட்டுக்குக் கொடுத்தால் நாலு அல்லது ஐந்து பிள்ளைகளைப் பராமரிக்கும் மனைவிபாடு திண்டாட்டம் தான்.
பாடசாலை செல்லவில்லை.!
“இவ்வூரில் ஓரளவிற்கு அரசாங்கமும், நிறுவனங்களும் உதவிகளை வழங்குகின்றபோதும் அவற்றினை பயன்படுத்தி முன்னேறத் தெரியாதவர்களாக இங்கு பலர் உள்ளனர்”
“யுத்தம் முடிந்தபோதும் நாட்டில் இனப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை.”
குடிப்பதற்கு நீரும் வைத்தியசாலைக்குச் செல்ல வீதிகளும் இல்லாதிருக்கையில் அல்லது காட்டு யாகைள் அழிவுகளைச் செய்கையில் பாரிய நகர அபிவிருத்தி ஒன்றைச் செய்வதானால் பயன் எதுவுமில்லை.
இந்தியாவின் செல்லாக் காசு இலங்கையில் !?
“ஒரு கும்பல் 50 சதவீத கமிஷனுடன் இந்தியப் பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள், வந்தது வரைக்கும் லாபம் என்று மக்களும் அதற்கு உடன்பட்டு மாற்றிக்கொள்கிறார்கள்”
அன்பு டையீர், நிகழும் பார்த்திப வருடம் ஆடி மாதம் 14ஆம் நாள்(30.07.2005) சனிக்கிழமை வரும் சுபவேளையில் எமது இல்லத்தில் நடைபெறவிருக்கும் பண வரவு வைபவத்தில் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து சபையைச் சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம். மு.கு – 1998ஆம் ஆண்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொள்ளாதவர்களும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படி ஒரு அழைப்பிதழ்! யாழ்குடாநாட்டின் சிலபகுதிகளில் இப்படி ஒரு வைபவம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘பண வரவு வைபவம்’ என்கின்ற […]
இவர்களா மாற்றுத்திறனாளிகள் !?
கச்சான் பிடுங்கும் காலம் வந்துவிட்டது.!வாழை குலை போட்டுள்ளது. மரவள்ளி நல்ல கிழங்குகளுடன் செழிப்புற்றுள்ளது. பீற்றூட், புடலங்காய், வெண்டி என மரக்கறிகளுக்கும் பஞ்சமில்லை. தென்னைகள் காய்ப்பதற்கு தயாராகிவிட்டன. ஜம்புவும் பலாவும் காய்க்கும் காலம் வெகு தொலைவிலில்லை. இவ்வாறு நிலம் தரும் பயனை நன்கு அனுபவிக்கும் மரங்களும் தாவரங்களும் என அந்த வீடு நிமிர்ந்துநிற்கிறது. வவுனியாவில் கணேசபுர கிராமத்தில் 2010இல் குடியேறிய சிவாஜினி கைக்குழந்தையுடன் நிலத்தை செழிப்பாக்கத்தொடங்கியவர். இன்று வரை தொடர்கிறார். பயிர் வளர்ப்பு முதல் கோழிவளர்ப்பு வரை இயற்கைமுறையில் […]
என் குடும்பத்துக்கு ஒரு வீடு வேண்டும்
யாழ்பாணம் கச்சேரிப் பகுதியில் மிருதங்கம் தபேலா போன்ற இசைக்கருவிகளை 21 வருடங்களாக தயாரித்து வருகிறார் சதாசிவம் தெய்வேந்திரம். 21 வருட காலமாக சளைக்காது இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வசிக்கிறார். 5 பிள்ளைகள். அனைவரும் பாடசாலைகளில் படிக்கிறார்கள். “நாளாந்தம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?” “300 ரூபா தொடக்கம் 500ரூபா வரை வரும்.” “பிள்ளைகளின் கல்விச் செலவை எவ்வாறு ஈடுசெய்கிறீர்கள்” “எனது உழைப்பு மட்டும்தான் குடும்ப வருமானம். அதில்தான் கல்விக்கும் கொடுக்கவேண்டும். மிகச் சொற்ப வருமானத்தை […]
மூன்று வேளை உணவே பெரும் போராட்டம்தான்
1953ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்தவர் அருமைத்துரை மகேஸ்வரி. 1975ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வசிக்க வந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு அருகே கச்சான் விற்கும் தொழிலைத் தொடங்கினார். ஜந்து பிள்ளைகள் அவருக்கு. மொத்தக் குடாநாடும் 1995ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தபோது கிளிநொச்சிக்குச் சென்றார். அங்கும் கச்சான் விற்பதே தொழிலானது. யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தும் அதே தொழிலைத்தான் செய்கிறார். இப்போது நான்கு பிள்ளைகள் திருமணம் செய்துவிட்டனர். தற்போது கணவன் மற்றும் தனது ஜந்தாவது […]
யாழ். மத்தியபேருந்து தரிப்பிடத்தை கடந்து மின்சாரநிலைய வீதி வழியாக நடந்து கொண்டிருந்தேன். வீதி ஓரத்தில் காணப்பட்ட “பெண்கள் ஆட்டோ தரிப்பிடம்’’ என்னும் மும்மொழிகளிலமைந்த பெயர்சுட்டுப் பலகை எனது கவனத்தை ஈர்த்தது. நான் சென்ற நேரத்தில் ஆட்டோ தரிப்பிடம் என்னும் பெயர் சுட்டுப் பலகைதான் அந்த இடத்திலிருந்ததே தவிர முச்சக்கரவண்டி எதுவும் இல்லை. ஐந்து நிமிட இடைவெளியில் முச்சக்கரவண்டி ஒன்று அந்த இடத்தில் வந்து தரித்தது. சாரதி ஆசனத்தினை பெண்மணி ஒருவர் அமர்ந்து அழகு செய்தார். குறுந்தூரப் […]