Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල
நாங்கள்

கட்டுமரம் என்பது இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்கள் மும்மொழிகளிலும் எழுதுகின்ற ஆக்கங்களை வெளியிடுகின்ற ஒரு சாரளம். நாட்டில் உள்ள மிகவும் வசீகரமான செய்திகள் கதைகள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் வெளியாகும்போது அவற்றின் ஆழமான பின்னணிகளையும் ஆய்வுகளையும் வழங்கும். இதில் இடம்பெறும் செய்திகள் கதைகள், அறிக்கைகள் அனைத்தையுமே இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் இலவசமாகப் பயன்படுத்த முடியும். புதிய செய்தியாளர்களுக்கு ஓர் அறிமுகத்தைக் கொடுப்பதும் அனுபவம் வாய்ந்த செய்தியாளர்களுக்கு பரந்தளவிலான வாசகர்களைப் பெற்றுக்கொடுப்பதுமே இந்தத் திட்டத்தின் நோக்கம். இலங்கையின் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த பத்திரிகையாளர்களை ஒன்றிணைப்பது அவர்களிடையேயான உறவை இறுக்கமடைய வைக்கும். இது அவர்களிடையிலான ஒத்துழைப்பையும் அதிகரிப்பதோடு இலங்கை ஊடகப் பரப்பின் ஆளுமையை விருத்தி செய்வதிலும் பங்களிக்கும்.
இந்தக் கட்டுமரம் என்கிற திட்டம் ஜெர்மன் தலைநகர் பேர்லினைத் தளமாகக் கொண்டியங்கும் ஒத்துழைப்பு மற்றும் மாற்றுதலில் ஊடகம் என்கிற அமைப்பினால் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் என்பவற்றுடன் சேர்ந்து நடத்தப்படுகின்றது. இதற்கான நிதி ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஜெர்மன் கூட்டரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்படுகின்றது.