பாரம்பரிய உணவுகளை நாடும் மக்கள் !
“புல்லுச் செருக்கியும் கல் சுமந்தும் கொழுத்துற வெயிலில கூலி வேலை செய்துகொண்டிருந்த நான், இப்ப நிழலில இருந்து வியாபாரம் செய்யிறன். எனக்குத் தெரிஞ்ச வேலையைச் செய்யுறதோட அன்றாட செலவுக்கும் காசு கிடைக்கிறது சந்தோசமாயிருக்கு” என்று கூறுகிறார்; தர்சிகா சத்தியரூபன். கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பகுதியில் உள்ள சங்கத்தார் வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்சிகா சத்தியரூபன். கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் செல்வீச்சுக்கு கணவர் பலியாக, காலில் காயமடைந்த தர்சிகா தனது ஐந்து வயது மகன் […]
மூழ்கடிக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை நஷ்டஈடு இல்லை.
இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் நிறைவேறும் தறுவாயை நெருங்கும் பொழுது நீரில் மூழ்கடிக்கப்பட்ட தங்கள் காணிகளுக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லையென அவ்விடத்து மக்கள் கூறுகின்றனர். அவர்கள் இழப்பீடாகப் பெறக்கூடியதிலும் பார்க்க வாழைத்தோட்டம் பயிரிடும் நிறுவனம் ஒன்று கூடுதலான அனுகூலத்தைப் பெறவுள்ளது என தெரியவருகிறது. ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து அதன்மூலம் அண்மையிலுள்ள பகுதிகளில் நிலவும் நீர்ப்பாசனப் பிரச்சனையைத் தீர்ப்பது சம்பந்தமாக ‘யான் ஓயா’ திட்டம் பல காரணங்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிவிட்டது. இலங்கையின் மிகப் பெரியது என […]
தூங்காத கிராமமொன்று உண்டு….. என்னும் பாடல் ஒரு காலத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இதுவும் தூங்காத ஒரு கிராமம் பற்றிய ஒரு கதைதான். வடமத்திய மாகாணத்தின் கல்பிட்டிக் குடாக்கடல் மற்றும் சமுத்திரக் கரையோரத்திலிருக்கும் வியப்பு மிக்க கிராமம் கற்பிட்டி. அங்கு வாழும் முன்னூறு வரையான குடும்பங்கள் தொழில் ரீதியாக விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் மலைநாட்டு மற்றும் தாழ் பிரதேச மரக்கறி வகைகளைப் பயிர்செய்து உள்ளூர் உணவுகளுக்குச் சுவை சேர்க்கின்றனர். மீன்பிடி மூலம் நாட்;டிற்குத் தேவையான போஷாக்குக் […]
நாலு பேர் சொல்லினம்!
“நாலு சனம் என்ன சொல்லும்…” அனேகமான தமிழ் வீடுகளில் இந்த வார்த்தை பிரயோகிக்கப்படுவது சர்வசாதாரணம். குடும்ப அங்கத்தவர்களின் நடவடிக்கைகளில் வழமைகள் மாற்றப்படும் போது இந்த வார்த்தை அனேகமாக பாவிக்கப்படுகிறது. குடும்ப அலகிற்குள் நடைபெறும் பல விடயங்கள் ‘சனம் என்ன நினைக்கும்’ என்பதற்காக பார்த்து பார்த்துசெய்யப்படும். ‘நாலு சனம் எங்களுக்கு வேணும்’ என்றுசொல்லும் அந்த வார்த்தையும் பிரபலமானது. ஒருவர் இறந்த பின் உடலைத் தூக்கிச் செல்ல நாலு பேர்தான் தேவை. எனவே இந்த நாலுபேர் என்பது ஒரு குறித்த […]
/ திருமதி ரஜனி புவிராஜசிங்கம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு ஆலவராகக் கடமையாற்றுபவர். திருமணமானவர். கலைத்துறை சார்ந்தும் அதிக ஈடுபாடுடையவர். பெண்கள் உரிமை தொடர்பாகக் குரல் கொடுப்பவர். அண்மையில் பெண்கள் தொடர்பான குறும் திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டிருந்தார். தமிழ் பாரம்பரியத்தில் திருமணமான பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயரை நீக்கித் தமது கணவனின் பெயரைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் உள்ளது. இவர் அவ்வாறு செய்யாது தனது பெயரைத் தந்தையின் பெயருடனேயே வைத்துள்ளார். இந்தத் தைரியத்திற்கு […]