‘ஒருவகையான நாசகார செயலாகவே இதைக் கருத வேண்டும்.’– சமந்த வித்தியாரத்ன
அழிவுக்கான திட்டம் உமா ஓயா அபிவிருத்தி தித்தால் பாதிக்கப்பட்ட மக்களது குரல் ‘கட்டுமரம்’ ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன ஆரம்பம் முதலே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒருவராவர். கேள்வி : உமா ஒயா பல நோக்கு அபிவிருத்தி திட்டத்தை பலவிதமான அழிவுக்கான திட்டம் என்று அழைக்கும் உங்களினதும் அதற்கு எதிரானவர்களினதும் எதிர்ப்புக்குக் காரணம் என்ன? எமது மக்கள் மத்தியில் ‘அரிவாளை விழுங்கியது’ போன்று மௌனம் சாதிப்பதாக ஒரு […]
உயிர் பிழைத்திருக்க வேண்டுமாயின் மாற்றமடையும் நிலைமைகளுக்கேற்பத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது செத்து மடியநேரும் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோட்பாடு உயிர் வாழ் இனங்கள் எல்லாவற்றிற்கும் ஏற்புடையதாகும். புதிய சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப தன்னைச் சரிசெய்து கொள்வதற்கு ஒருவர் மனோபலம் மிக்கவராக இருத்தல் வேண்டும். இதில் வரும் பெண் பாத்திரத்தின் கதையும் அப்படியான ஒன்றாகும். அவளுடைய கிராமத்தின் அருகாக ஓடிக்கொண்டிருக்கும் முக்குணு ஓயா என்னும் சிற்றாறின் அடிமட்டத்திலிருந்து மணல் சேகரிக்கிறாள். அதில் கிடைக்கும் நாளாந்த சம்பாத்தியத்தைக் […]
/ மது அருந்துவது அல்லது அருந்தாமல் இருப்பது மனிதருக்கு இருக்கின்ற ஒரு உரிமையாகும். ஆனால் அந்த மதுவால் ஒரு நாகரீகமே அழிவுறும் நிலை ஏற்படுமானால் அது தீர்வு காணப்பட வேண்டிய துக்கரமான செயலாகும். கதிரவன் மெதுவாக மலை முகட்டுக்குள் மறையும் நேரம் அது. அந்த மாலை நேரத்தில் சில்லென்று வீசும் குளிர் காற்று காரணமாக படிப்படியாக ஊர் எங்கும் குளிர் பற்றிக் கொள்வதோடு வழக்கம் போல அவசர அவசரமாக இயங்கும் எறும்புக் கூட்டத்தைப் போல் மதுவுக்கு அடிமையான […]
‘சொந்த காணியில பயிர்செய்தனாங்கள் இப்ப கூலிக்கு போறம்’
எங்கட காணிய எங்களிட்ட தந்தா போதும். நாங்க அத வைச்சு வாழ்ந்து பிழைச்சிக்குவம். இதைப் போல 69 குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்கனும். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் கிராமத்தில் இன்னும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பிலோ அல்லது அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றுக்காணிகளை வழங்குவது தொடர்பிலோ ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் […]
“மீன் புடிக்க போறதுக்கு மெத்தப்படிக்கோணுமா என்ன?”
ராணி “எனக்கு வயசி பதினொண்டு. மீன் பொறக்க போனன்டாக்கா எனக்கு போட்டில இருக்கிய மாமாமார்கள் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா சல்லிதார. நானும் ஏண்ட கூட்டாளிமார் பொடியன்களும் போய் மீன் பொறக்கி கிடச்ச சல்லீல பலூடா குடிச்சிய, பொடியன்களோட பெட்புடிச்சி கிரிக்கெட் அடிச்சிய. விடியசெல்ல ஸ்கூல் போக மாச்சலா இருச்சிய.” என்கின்றான் தரம் ஆறில் கல்வி கற்கும் செவான் என்னும் சிறுவன். தழிழ் குடும்பத்தைச் சேர்ந்த செவான் படிப்பதோ சிங்கள மொழிமூல பாடசாலையில்தான். இவனைப் போல் பல […]
மொனராகலைக்கு மிகவும் உயரமாக அமைந்திருப்பது அலியாவத்தை கிரமமாகும். இந்த கிராமம் மிகவும் உயரமான பகுதியில் அமைந்திருப்பதாலும் அங்கு வாழ்வது தமிழர்களாக இருப்பதாலும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அங்கு வாழும் மக்கள் மிகவும் சிறியவர்களாகவே தென்படுகின்றனர். இந்தச் சிறியவர்களின் வாழ்கையை சற்று பெரிதாகக் காட்டும் ஒரு பிரதி பிம்பமே இக்கதை. “நாங்கள் தமிழர்கள் ஐயா! அதுவும் வடக்கில் உள்ளவர்களைப் போல,ஆனால் எம்மை யாரும் கண்டு கொள்வதில்லை. பிறந்த குற்றதிற்காக வாழ்கின்றோம். மின்சாரம் இல்லை. பாதை இல்லை. மரகல கந்தை என்றழைக்கப்படும் […]
தமது நாட்டார் கலை இலக்கிய வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் அசமந்தமாக இருக்கிறார்கள் என்கிறார் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த எழுகவி ஜெலீல் (49) “நாட்டார் பாடல்களுக்கு ஆசியரியர்கள் இல்லை” எனும் பொது நியதியை தகர்த்து “அரை நிலை நாட்டார் பாடல்கள்” எனும் புது வடிவத்தினை இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்கொண்டு செல்கிறார் ஜெலீல். முஸ்லிம் கலை, இலக்கியப் பாரம்பரியம் மிக்க தென்கிழக்குப் பிராந்தியத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வாழ்பவர்தான், நாட்டார் பாடல்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல பாடுவதிலும் அதனைப் பாதுகாத்துத் […]
கடலுக்குள் கரைந்துபோகும் ஒலுவில்
கிழக்கு மாகாணத்தின் அம் பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒலுவில் கிராமம் தனி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமமாகும். பிரதானமாகக் கடல்வளத்தின் மூலம் மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்ந் தவர்கள் இந்தக் கிராம மக்கள். பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதர வைப் பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அந்தக் கட்சிக்கு முழு ஆதரவு வழங்கும் கிராமம் இது. இதனாலும் தனிப்பட்ட பிடிப்பினாலும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் நிறுவுநர் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்தக் கிராமத்தையும் இங்குள்ள மக்களை […]
கனவுகளைத் தொலைத்து விடாதவள்
வழக்கத்திற்கு மாறான வடிவத்தில் இருக்கிறது அந்தச் சக்கரநாற்காலி. கனமான, நீளமான இரும்பு அடிச்சட்டத்துடன் துருத்திக்கொண்டிருக்கும் அதன் மூன்றாவது கால் வித்தியாசமானது, மற்றைய சக்கர நாற்காலிகளில் இருந்து மாறுபட்டது. அதில் அமர்ந்திருக்கும் வேலு குமுதினியைப் போலவே. குமுதினி மற்றையவர்களைப் போலவே சாதாரணமானவராகத்தான் தெரிகிறார். ஆனால், அவரது சக்கர நாற்காலியின் நீண்ட மூன்றாவது காலைப்போன்றே அவருக்கும் ஒரு நீண்ட மறைந்த பக்கம் இருக்கிறது. அவரால் தனது கடந்த காலத்தை இப்போதும் உணரமுடிந்தாலும் நிகழ்காலத்தை அவ்வளவு இயல்பாக உணர முடியவில்லை. நடந்து முடிந்த […]
இந்து கலாசார மரபின்படி தமிழ்ப் பெண்களின் வாழ்ககைத் தலைவிதி நெற்றியில் தெரியும் பொட்டில் வெளிப்படும். பொட்டுக் கலைந்திருந்தால் அவள் கணவனை இழந்த விதவை என்பதைப் பளிச்சென்று காட்டிவிடும். குரூர யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களின் நெற்றியில் பதிந்த பொட்டுக்களைக் கலைத்துவிட்டன. நன்பகல் உச்சத்தில் வெளிச்சம் தரும் கதிரவனின் சுட்டெரிக்கும் அனல் பறக்கும் வெய்லின் கொடூரத்தை அனுபவித்தவர்களாக முல்லைத்தீவு கிழக்கு நந்திக்கடல் களப்பு பகுதி வழியாக ஒருவாறு செல்லராஜாவின் வீட்டை அடைந்தோம். அவளின் குட்டி வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளால் […]
வவுனியாவில் இருந்து 40 கி.மீற்றர் தூரம் தூசுமண்டலத்திற்குள் பிரயாணம் செய்தால் யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட போகஸ்வெவ குடியேற்ற மக்கள் அனுபவிக்கும் தயரங்களைக் கண்டுளொள்ளலாம். எமது தலைவர்களால் இந்தத் துயரங்களை அறிய முடியாதிருப்பது கலை தருகின்றது. “போகஸ்வெவ பஸ் நிறுத்தப்படுவது எந்த இடத்தில்?” நன்பகல் உச்சி சூரியனின் சுட்டெரிக்கும் கடும் உஷ்ணத்தின் கொடூரத்தால் வடிந்Nதூடும் வியர்வையை என் ஒரு கையில் இருந்த கைக்குட்டையால் துடைத்தவாறு கேட்டேன். “ஆ ..ஆ அதோ இருக்கிறது என்று ஏனோ தானோ என்ற நிலையில் […]
ஊனம் என்பது உடம்பில் இல்லை!
சாதாரண மனிதர்களை விடவும் உடற் குறைபாடுகளை உடையவர்கள் அதிசயிக்கும் வகையில் திறமைசாலிகளாக இருப்பதை நாம் அறி வோம். அது அவர்களின் குறைகளை மறைப் பதற்காக இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பிரத்தியேக அருள் இதுவாகும். உடலில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ள எத்தனையோ பேர் அதைக் காரணமாகக் கொண்டு பிச்சையெடுத்து சோம்பேறித்தனமாக வாழ்வதை நாம் காண்கிறோம். ஆனால், சிலர் அந்தக் குறைபாடுகளை வெற்றிகொண்டு தன்மானத்தோடு உழைத்து வாழ்கின்றனர். தமக்குக் குறைகள் இருப்பதையே அவர்கள் மறந்துவிடுகின்றனர். சாதாரண மனிதர்களை விடவும் அசாதாரண […]
இலங்கையின் கரையோரக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்பிடியையே தனது ஜீவிதமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுள் சிலரைத்தவிர ஏனையவர்கள் கடலைத் தவிர மாற்று வாழ்வாதாரமற்ற நிலையில் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மெழுகுவர்த்தியாய் கரைந்துகரைந்து அவர்களின் வாழ்வின் மீதானகனவுகள் கானல் நீர் போல கனவாகிறது. அந்தவகையில் கிழக்கிலங்கையின் நிந்வூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்தான் 60 வயதாகும் நாகூர்த்தம்பி. இவரின் வாழ்க்கை விபரம் தெரிந்த காலம் முதல் இன்றுவரை கடலோடு கதையா கலந்துகிடக்கிறார். அவருடனான அனுபகப்பதிவு இது. […]
போரின் வடு: “நடத்தை கெட்டவள்”
அந்தப் பெண் துவண்டு மடிந்து விழுந்து விம்மிக்கொண்டிருக்கிறார். அவரை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் நான் கல்லாய் சமைந்து அமர்ந்து கொண்டிருந்தேன். என் நிலையை நான் உணர்ந்தபோது, அவர் அழட்டும் என்று விட்டுவிட்டேன். பல வருடங்களாக யாரிடமும் பேசாமல் அடக்கியே வைத்திருந்த இருந்த சோகம் அது. எப்போதாவது அதற்கும் வடிகால் வேண்டும்தானே! இந்தச் சமூகம் தன்னை “நடத்தை கெட்டவள்” என்றுகூறி ஒத்துகி வைத்துவிட்டது என்று அவர் இதுவரைக்கும் என்னிடம் தெரிவித்திருந்தார். தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியதே இந்தச் […]
ஆதம்பாவா: எதிர்காலத்தைத் தொலைத்தவன்
பார்ப்பதற்கு ஒல்லியாக நெடிந்து வளர்ந்துள்ளார் ஆதம்பாவா. பச்சை பசேல் என்று பரந்திருக்கும் வல்களை ஏக்கத்துடன் பார்க்கிறார். பூரிப்புடன் வளர்ந்து வரும் நெற்பயிரை வாஞ்சையுடன் தொட்டுத் தடவிய பின்னர் கையை தன் மூக்கின் நுனியில் வைத்து நுகர்கிறார். மூச்சை நன்கு உள்ளே இழுத்துவிட்டு நுகர்கிறார். நாசியினுள் ஏறும் அந்தப் பச்சைய மணம் ஆதம்பாவின் அழகான கடந்த காலத்தை அவருக்குள் மீட்டெடுக்கிறது. அந்த மணத்தை ஆழ்ந்து அனுபவிக்கிறார். ஒரு காலத்தில் இந்தப் பயிர்கள் எல்லாம் அவரது வருகைக்காகக் காத்திருந்த ஒரு […]
தூரத்தே தெரிவது “தெனகல” மலைப்பகுதி. தெனகல என்ற பெயர் வருவதற்கு காரணம் அந்த இடம் ஒரு பெண்ணின் மார்பகங்களைப் போல் தோற்றமளிப்பதுதான். இந்த தெனகல அமைந்திருப்பது லெவலன் (LEVELLON) என்ற தோட்டத்தில். ஒருமுறை பனிச் சால்வையால் இந்த மர்பகங்கள் மூடப்படுகின்றன. மீண்டும் அது நிர்வாணமாக்கப்படுகின்றது. நிர்வாணமாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெனகல மார்பகச் சோடி பாணையின் கருமை நிறத்தில் காட்சி தருகின்றது. இந்த இனிய காலை நேரத்தில் சூரிய பாலகனுக்கு தெனகல பாலூட்டுவது போன்று தெரிகின்றது. அன்பு வடிந்தோடும் […]