நிர்மல் ரஞ்சித் தேவ்சிரி
அரசியல்வாதிகள் தமக்கு விரும்பியதைச் செய்கிறார்கள். சமூகம் அதில் சிக்கியுள்ளது.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் ஜனநாயக செயற்பாடுகளும் அதிகரித்தள்ளன. ஆனால் அவை அரசாங்கத்தால் மாத்திரம் செய்யப்பட்டவைகளாக கருத முடியாது. அந்த நிலை எற்படக் காரணம் நாட்டின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும்.
நாடு இக்கட்டான நிலைக்குள்ளாகி இருப்பதாக வரலாற்றாசிரியரும் அரசியல் செயற்பாட்டாளருமான நிர்மல் ரஞ்சித் தேவ்சிரி குறிப்பிடுகின்றார். நல்லிணக்கத்திற்கான பேச்சுக்கள் அர்த்தமற்றதாகின்ற போது சிங்கள அரசியல்வாதிகளால் எந்தவிதமான உடன்பாட்டிற்கும் வர முடியாத நிலை ஏற்படலாம். அதே நேரம் வெற்று வாக்குறுதிகள் காரணமாக மக்களும் ஏனைய அமைப்புக்களும் கடுமையாக எதிர்பார்த்தாலும் அடைந்தவைகள் எதுவும் இல்லை. ஆனாலும் அரசியல்வாதிகளால் ஒருசில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்களுக்கு பிரயோசனமான விடயங்கள் நடைபெறவில்லை என்று தேவ்சிரி கூறினார்.அவருடனான நேர்காணல்.
த கட்டுமரன் : இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பாக அதிகமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. உள்ளநாட்டில் நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பாக உங்களது கருத்து என்ன?
தேவ்சிரி : நல்லிணக்கத்தை அடைவதானது இலகுவான காரியமாக இல்லை. இலங்கையின் அரசியல் அமைப்பு எவ்வாறு மீள்கட்டமைக்கப்பட வேண்டும் என்பதோடு சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் இந்நாட்டின் அரசியல் நடைமுறை தொடர்பாக உடன்பாடு எட்டப்பட வேண்டும்.
அத்துடன் இந்த நாட்டில் எதிர்ப்பரசியல் கருத்துக்களும் உள்ளன. அவைதான் வடக்கில் வாழும் தமிழர்களது கருத்துக்களும் தெற்கில் வாழும் பௌத்த சிங்களவர்களது கருத்துக்களுமாகும். இந்த கருத்துக்கள் பரஸ்பரம் பிரத்தியேகமானதாகும். யாராவது இந்தக்கருத்துக்களை எதிர்ப்பார்களாயில் அவர்கள் விளைவுகளைச் சந்திக்கவேண்டியேற்படும். வாக்குகளைப் பெறுவதில் அவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியேற்படுகின்றது.
தெற்கில் உள்ளவர்கள் இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற அதே நேரம் வடக்கில் வாழும் தமிழர்கள் இலங்கை ஒரு சமஷ்டி நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த இரண்டு விதமான முரண்பாடான கருத்துக்களுக்கும் இடையில் உடன்பாடோ அல்லது நல்லிணக்கமோ காணப்படவில்லை.
/
நிமல் ரஞ்சித் தேவ்சிரி
நல்லிணக்கம் தொடர்பாக நாம் பேசுகின்ற போது முதலாவதாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் இதுவாகும். இந்த முரண்பாடான நிலையை மாற்றியமைத்து சாதகமான போக்கை உருவாக்குவது எவ்வாறு என்பது என்ற இடத்திற்கு நாம் வரவேண்டியிருக்கின்றது. இந்த நிலை தொடர்பாக நாம் மூலோபாயங்களை வகுக்க வேண்டிய நிலையில் இருந்தாலும் இதுவரையில் அவ்வாறு எதுவும் ஏற்பட்வில்லை.அதனால்தான் இந்த நல்லிணக்க செயற்பாட்டில் சாதகமான நிலை உருவாகவில்லை என்று நான் கருதுகின்றேன். நான் இதுவரையில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் எம்மால் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்று நான் கூறவில்லை;. ஆனாலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக உள்ள விடயத்தின் தாக்கம் பற்றி சிந்திக்க வேண்டி யிருக்கின்றது.
த கட்டுமரன் : தமிழ் மக்களைப் பிரநிதித்துவப் படுத்தும் வகையில் வடக்கில் உள்ள பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக அவர்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த அரசியல் அமைப்பு மாற்றமானது நாட்டில் மாகாண சபைகளை உருவாக்குவதுடன் அதிகாரங்களை கொழும்பில் இருந்து வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு வழங்குவது தொடர்பானதாக அமைகின்றது. இந்த செயற்பாடானது ஒரு சாதகமான நடவடிக்கை என்று நீங்கள் கருதவில்லையா?
தேவ்சிரி : நான் அதை ஏற்றுக்கொள்வதில்லை. சமஷ்டி அல்லது மத்தியமயப்படுத்தப்பட்ட அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று நான் கருதவில்லை. அத்துடன் த.தே.கூ. அமைப்பும் தமிழ் மக்களும் அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்த விடயத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்ற அதே நேரம் சிங்கள மக்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. வடக்கில் “13 இற்கு மேலாக” வேண்டும் என்று கேட்கின்ற அதே நேரம் தெற்கில் “13 ஈற்கு கீழ்” என்றே கூறுகின்றனர்.
த கட்டுமரன் : ஆகவே இந்த அரசு இறுதியானதாக அமையுமா?
முரண்பாடான நிலையை மாற்றியமைத்து சாதகமான போக்கை உருவாக்குவது எவ்வாறு என்பது என்ற இடத்திற்கு நாம் வரவேண்டியிருக்கின்றது
தேவ்சிரி : பிரதமரின் குழுவுக்கும் ஜனாதிபதியின் குழுவுக்கும் இடையில் வலுவான போராட்டம் விரிவடைந்து கொண்டிருக்கின்றது. இது எந்த வழியில் முன்னேற்றமடையும் என்பதை கூறுவது சாத்தியமற்றதாகும். இது ஒரு வழக்கத்திற்கு மாற்றமான நிலைமையாகும்.
த கட்டுமரன் : அவ்வாறாயின் இரண்டு தலைவர்களுக்கிடையிலும் தெளிவான உடன்பாடு இருக்கும் என்று நீங்கள் கருதவில்லையா?
தேவ்சிரி : அங்கே உடன்பாடு இல்லை. அங்கே மேம்போக்கான அறிவின் அடிப்படையில் இரண்டு தலைவர்களுக்கிடையிலும் வவேறான கருத்துகளே காணப்படுகின்றன. இரண்டு பேரினது ஆர்வமும் தமது முன்னணிகளைப் பாதுகாப்பதில்தான் உள்ளது. அவர்கள் அதைச் செய்ய வேண்டியதேவையிருக்கின்றது.
த கட்டுமரன் : நாட்டின் அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகள் நிறைய இருப்பதாக அரசாங்க தரப்பிலான விமர்சகர்கள் கூறுகின்றனர். குற்றவாளிகளும் மோசடிக்காரர்களும் பாதுகாக்கப்படுவதோடு சட்டமானது அரசியல் எதிரிகளுக்காக மாத்திரம் பயன்படுத் தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் நல்லாட்சியாளர்கள் எவரும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தேவ்சிரி : நல்லவைகள் நடந்தால்அவற்றை அரசு நடத்தவில்லை. உதாரணமாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் ஜனநாயக செயற்பாடுகளும் அதிகரித்தள்ளன. ஆனால் அவை அரசாங்கத்தால் மாத்திரம் செய்யப்பட்டவைகளாக கருத முடியாது. அந்த நிலை எற்படக் காரணம் நாட்டின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும்.
த கட்டுமரன் : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாததிபதி முறையை ஒழிப்பதாக
அரசியல்வாதிகள் சில வருடங்களாக வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
அதிகமான வாக்காளர்கள் இதனை வெறுத்திருப்பதோடு இந்த விடயமானது ஜனநாயக
மரபுகளுக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
தேவ்சிரி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கம் தொடர்பாக நாட்டில் பரந்தளவிலான கருத்துக்கள் உள்ளன. இது வேண்டும் என்று சில மக்கள் கூறுகின்றனர். நான் நினைக்கின்றேன் அரசாங்கம் வித்தியாசமான முறையில் அதிகாரத்தை குவியப்படுத்துகிறது. எனவே எல்லா அதிகாரங்களும் ஒரு ‘சுப்பர்’ அமைச்சரிடம் இருப்பதன் ஆபத்தை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது என்று நான் கருதுகின்றேன்.
நாம் இலங்கையின் கல்வி நிலை தொடர்பாக கலந்துரையாடுகின்றபோது நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதம் கல்விக்காக செலவிடப்பட வேண்டும் என்கிறோம். அதிகமான அரசியல்வாதிகள் சரியான முறையில் சிந்திக்காமல் சில விடயங்களை பிரஸ்தாபித்து வருகின்றனர். அதில் என்ன உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் சரியாக சிந்திக்க வில்லை. அவ்வாறேதான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது என்ற சுலோகமும் அமைந்திருக்கின்றது.
எமது சமூகத்தை அரசியல் ரீதியாக மேலும் விழிப்படைந்த மக்களாக்குவதற்காக நாம் நிறை செயலாற்ற வேண்டியிருக்கின்றது.
அரசியல் அமைப்பிற்கு திருத்தம் கொண்டு வருவது போன்று சில விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அரசியல் அமைப்பிலான திருத்தம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள அதிகாரம் மிக்க ஒருவர் சிவில் சமூகங்களுக்கு கருத்துக்களை முன்வைத்த போதும் அவை அவர்களால் ஒரு ‘சுவிங்கம்’ போன்று மெல்லப்படுவதாக இருக்கின்றது. அதே நேரம் அரசாங்கமானது ஏனைய விடயங்களில் கவனம் மிக்கதாக இருந்து வருகின்றது. அரசியல்வாதிகள் அம்பாந்தோட்டையில் செய்தது போன்று அவர்கள் நினைப்பதை செய்கின்றார்கள். (அங்கு பிரதானமான அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் கடன் மூலம் மேற்கொள்ளப்பட்டதாயினும் அது கருத்து வேறுபாட்டுக்குரியதாகும்) அத்துடன் ‘மெகாபொலிஸ்’ என்பது இன்னுமொரு திட்டமாகும் (நாட்டின் மேற்கு பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்)
அப்போது சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாக இருந்து வருவது குறைந்தபட்சம் எங்களுக்கு ஒரு சிறந்த அரசியல் அமைப்பு இருந்தால் போதுமானது என்பதாகும்.அவர்கள் ஏனைய செயற்பாடுகளை பொறுத்துக்கொள்வார்கள். அது ஒரு பொறி. அதற்குள் இந்த சிவில் அமைப்புகள் சிக்கிக்கொண்டுள்ளன.