Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

“நாட்டினைப் பொருத்தவரை முஸ்லிம், இந்து, பௌத்த, கிறீஸ்தவ பாடசாலைகள் என பாகுபடுத்தியிருப்பது பிரச்சினைதான். முஸ்லிம் பாடசாலைகளில் இனவாத எண்ணக்கருக்கள் புகட்டப்படலாம். தனி இந்து பாடசாலைகளில் இனவாத கருத்துக்ள் புகட்டப்படலாம். அதேபோல் பௌத்தம், கிறீஸ்தவம். எனவே பாடசாலைகளில் இவ்வாறு இனவாத கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் பல்கலைக்கழகங்களுக்கு வரும்போது அந்த நிலை முற்றிலும் மாறுபடவேண்டும். இதையும் கருத்தில் கொண்டுதான் நாம் மத பன்மைத்துவத்தை இங்கே கட்டமைத்து நடைமுறைப்படுத்தி வருகிறறோம்.”

15.11.2018

வளமும் செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது தமிழர்களால் கைவிடப்படும் நிலையில் உள்ளது. போர் மக்களை மட்டுமல்ல நிலத்தையும் தின்று தீர்த்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழடைத வீடுகளே எஞ்சியுள்ளன. அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும் மக்கள் குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை அண்மைய செய்திகளில் படித்திருப்போம்.

30.10.2018

விருதுக்காக எழுதுகிறார்கள். அது கிடைப்பதற்காக, புறக்கதவு வழியாகச் செல்கிறார்கள். கிடைத்ததும் காணாமல் போய்விடுகிறார்கள்.

21.10.2018

சிலர் குடும்பத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு சடலமாக நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்வர்களை காணாமல் போனோர் என அவர்களது உறவுகள் கூறுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில மட்டும்; அதிகாரபூர்வ தகவலின்படி 2017 வரை ஆகக் குறைந்தது ஐந்நூறு பேர்வரை தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்படுள்ளனர்.

14.10.2018

“நல்லாட்சி என கூறும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிப்பார்களா என யாரும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை. ஆனால்,இனவழிப்பை நியாயப்படுத்திய படத்தை திரையிடவில்லை என்றதும் எங்கே கருத்து சுதந்திரம் என கேள்வி எழுப்பப்படுகின்றது…”

08.10.2018

இறந்துபோன இரண்டு இளைஞர்களும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்தவர்கள். போரில் வளர்ந்தவர்கள். பொருளாதாரம், கல்வியறிவு என்பவற்றில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பொருளாதாரத்திற்காக இந்த அபாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள்.

20.09.2018
காதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின்....

காதல், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே !?

இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்ட பிரிவு ஆகும். இது பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு. அதை (377ஐ) நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வருட நடுப்பகுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இது குற்றமற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இலங்கை மக்கள், அதிலும் கொஞ்சம் படித்தவர்கள்ளின் மனநிலை பற்றி கட்டுமரன் அறிய முனைந்தது. மாற்றுபாலினத்தாரையும்(3rd Gender)  தன்பாலீர்ப்பினரையும்(samesex) இணைத்து பால்புதுமையினர் […]

17.09.2018

வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்படும் மக்களின் மனநிலை நெருக்கீடுகளுக்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் முற்று முழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்வில்லை என்றே கூறவேண்டும்.

10.09.2018
யாழில் மீண்டும் வண்டில் சவாரி!

இது மிருக வதையா?

சவாரி ஓடும் மாடுகளின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்ட அவர் “சுமார் 20 இலட்சங்களையும் தாண்டி செல்லும்.” என்றார். ஆம் சவாரி மாடுகள் நன்றாக சவாரியில் ஓடினால் சாவாரித் திடலிலேயே அந்த மாடுகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு ஆக்கள் இருப்பார்களாம்.

09.08.2018

வீட்டின் பின் கதவின் வழியாக எங்கள் வீட்டுக்குள் அந்தக் குடும்பத்தை வரவழைத்து ஒளித்து வைத்தோம். கடவுளே அந்த பொழுதுகள் பயங்கரமானவை. இப்பொழுது நினைத்தாலும் எனக்கு உடலெங்கும் ஒருவித அச்ச உணர்வு பரவுகின்றது.

31.07.2018

இனம், மதம் என்பவையெல்லாம் ஒரு உணர்வு ரிதியான விடயங்கள். இதை வைத்து எவரும் சுயலாபம் தேடிக் கொள்ள முடியும். அதுதான் அண்மைக் காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. இவற்றை வைத்து பிரித்தாள்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

05.07.2018

“நாம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முன்­பா­கவும் பாது­காப்பில் ஈடு­பட்டோம். இக் கல­கக்­கா­ரர்­களின் நோக்கம் உடை­மை­களை நாசப்­ப­டுத்­து­வ­தாகும். இப்­ப­கு­தியில் 14 அல்­லது 15 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அவற்றைக் காப்­பாற்ற எம்மால் முடிந்­துள்­ளது.”

15.03.2018

சிங்களப் பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவர்கள் பௌத்த சமயம் படிப்பது தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. அதைவிட்டால், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் படிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் சிங்கள மொழியில் படிப்பிப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதாவது சிங்கள மொழிமூலத்தில் அவை எழுதப்பட்டுள்ளன. இந்துமதத்திற்கு அவ்வாறில்லை.

17.02.2018

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு சமூகங்களிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றுக்குப் பின்னால் அரசியல் கரங்கள் செயற்படுவதால் பொது மக்களால் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வர முடியாமால் உள்ளது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்படாமல் பிரச்சினைகள் அவ்வாறே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. எனவே இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பதற்கு சிறந்த ஒரு பொறிமுறை செயற்பாடு அவசியமாகிறது. அவற்றுக்குத் தீர்வுகாணும் பட்சத்தில் இப்பிரதேசத்தில் மக்களிடையே சகவாழ்வு தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

25.01.2018
யாழ்பாணம் - வவுனியா

ஹிப்போவின் தொப்பி!

சாதாரணமாக ஒரு பொது போக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்ல 4 அல்லது 5மணித்தியாலங்கள் தேவைப்படும். அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இந்த இளைஞன் தன்காதலியை புகையிரத நிலையத்தில் இருத்திவிட்டு யாழ்ப்பாணம் வந்து மீண்டும் வவுனியா சென்றுகொண்டிருக்கிறார்.

07.01.2018

சமூகப் பிரச்சினைகளை இலகுவில் அடையாளம் காண்பவர்களாக பெண்கள் காணப்படுகின்றார்கள். அதனாலேயே அவர்களுக்குரிய சந்தர்ப்பம் அரசியலமைப்பிலே கட்டாயமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே அவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேர்தலிலே போட்டியிட்டு உள்ளுராட்சி மன்றங்களிலே காணப்படுகின்ற பெண்களுக்குரிய ஒதுக்கீடுகளை நிரப்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

08.12.2017