Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

யாழ்ப்பாணத்தில்.
கொரோனா யுத்தத்தில் சுய பொருளாதாரம்?!

“விவசாயிகளிடம் பொருள் இருக்கு மக்களுக்கு பொருள் தேவை உண்டு. எப்படி இருவரும் சந்திப்பது? கொரோனா பெரும் அச்சம். !ஊடரங்கு அமுல்.! இந்த நிலையில் இவர்கள் இருவரையும் எப்படி தொடர்பு படுத்தலாம் என்று நாம் யோசித்தோம். அனுமதி பெற்று…

29.04.2020  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவின் சந்தமின்றிய யுத்தம் திடீர் என்று மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நாடுகள் ஒவ்வொன்றுதம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டிருக்க, கடந்த இரு மாதகாலமாக இலங்கையும் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியது. படிப்படியாக அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் ஆகின. மருத்துவம் , வங்கி, உணவு துறை மட்டும் இயங்க அனுமதித்ததுடன் ஊரடங்கையும் அமுல் படுத்தியது.

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை தளர்த்தி அமுல் படுத்தும் நிலைமை 17.3.2020 தொடக்கம் 20.04.2020 வரை இருக்கவில்லை. ஒருவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் விற்பனைக்கு தயாராகவிருந்த வாழைக்குலைகள் அத்தனையும் மாடுகளுக்கு உணவாகின. ஒரு வருடம் காலை மாலை என்று வெய்யிலும் தண்ணியும் என்று விவசாயத்தில் கஷ்டப்பட்டு கடுமையான உடல் உழைப்பில் விளைவிக்கப்பட்ட வாழைக்குலைகள்! ஓவ்வொரு வாழைக்குலைகளும் 30, 35 கிலோ கொண்டவை. 1கிலோ 60-70 ருபா வரை விற்கப்பட்டவை. இன்று 10,15 ருபாவுக்கே கொஞ்சம் விற்க முடிந்தது. கொஞ்சம் அயலவர்களுக்க பகிர்ந்தளித்தோம். ஆனால் அயலவர்களும் வாழைத்தோட்டம் வைத்திருப்பதால் அவை கால்நடைகளுக்கு உணவாகின.” என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் வாழைத்தோட்ட விவசாயி இளையதம்பி தேவராசா.

இளையதம்பி தேவராசா.

கிளிநொச்சி முழங்காவில் பூநகரி போன்ற இடங்களிலும் தக்காளி, வெண்டி, பூசணி , கறி மிளகாய் என்று அத்தனைக்கும் நிலைமை இதுதான். பழுதடைந்தவை மண்ணுக்கு உரமாகின. அதை நட்டு வளர்த்து வருமானம் பார்க்க காத்திருந்த மக்களின் நிலை கொரோனா தாக்குதலுக்கு இணையாகி நின்றது. சாதாரணமாக முழங்காவிலில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நாளாந்தம் 15 திற்கும் மேற்பட்ட பாரவூர்திகளில் மரக்கறி கொண்டு செல்லும் நிலை இருந்தது. அது முடியாது போன நிலையில் அத்தனையும் தேங்கின. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சத்தைவிட இது ஒன்றும் பாரதூரமானதல்ல என சிலருக்கு எண்ணத்தோன்றும். ஆனாலும் தமது ஒட்டுமொத்த உடல் உழைப்பையும் நேரத்தையும் விவசாயத்திற்காக செலவு செய்த இவர்கள் அதை விற்றகவும் முடியாமல் மக்களுக்கு பயன்படுத்த கொடுக்கவும் முடியாமல் வீணாகிப்போனதையிட்டுதான் பெரும் கவலை கொண்டனர்.

நகர் புறங்களை அண்டியுள்ளவர்கள் அரச அதிபர் மற்றும் பொலிஸ்நிலைய அனுமதியுடன் விநியோக அனுமதி பெற்று சேவையில் ஈடுபட தொடங்கினர். தொலைபேசி ஊடாக பொருட்களை பதிவு செய்வதும் , அவர்கள் அதனை போக்குவரத்து செலவுடன் வீட்டிற்கு கொண்டுபோய்க் கொடுப்பதுமாக அந்த சேவை இருந்தது. ஆனால், யாழ் நகரின் விவசாயக் கிராமங்களில் விளைச்சல் கொண்ட மரக்கறிகள் , பழவகைகள் விற்பனை இன்றி வீணாகின.

அப்போதுதான் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளைப்பார்க்க முடிந்தது. மன்னாரில் 4000 கிலோ பூசணிக்காய்களை சந்தைப்படுத்தல் செய்ய முடியவில்லை, என்றும் விற்பனை வாய்ப்பை பெற்றுத் தரும் படியும் மன்னார் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதே போன்று முல்லைத்தீவில் 10,000 ரூபா பெறுமதியான தர்ப்பூசணியை சந்தைப்படுத்த முடியவில்லை என்று பெண் தலைமைக் குடும்ப உற்பத்தியாளர் ஒருவர் உற்பத்தியை விற்பனை செய்ய உதவி கோரி இருந்தார். இந்த விடயங்கள் சமூக வலைத்தள பாவனையாளர்களை விரைவாக செயற்பட வைத்தது. குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குள் பலரும் அந்தச் செய்தியைப் பகிர்ந்தனர். சில இளைஞர்கள் குழுவாக களத்தில் இறங்கினர்.

பழுதடைந்த வாழைக்குலைகள்

“விவசாயிகளிடம் பொருள் இருக்கு மக்களுக்கு பொருள் தேவை உண்டு. எப்படி இருவரும் சந்திப்பது? கொரோனா பெரும் அச்சம். !ஊடரங்கு அமுல்.! இந்த நிலையில் இவர்கள் இருவரையும் எப்படி தொடர்பு படுத்தலாம் என்று நாம் யோசித்தோம். அனுமதி பெற்று கிராமங்கள் தோறும் சில விற்பனை முயற்சிகளில் ஈடு படத்தொடங்கினோம்” என்கிறார் தம்பன் துஷாந்தன்.

பல்வேறு குழுக்கள் இந்த முயற்சியில் இறங்கின. கோயில் வளாகங்களுள் திறந்த வெளி சந்தைகளை உருவாக்கி குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்தனர். கிராமங்களுக்குள் சென்று பொருள்களை கொள்வனவு செய்து தேவைப்படும் வீடுகளுக்கு வினியோகித்தார்கள். இவ்வாறு இக்கட்டான சூழலில் இளைஞர்களின் செயற்பாடு சமூகத்திற்கானதாக மாறியது. அந்த இளைஞர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை. நல்லிணக்கமும் சமூக சிந்தனையும் கொரோனா எதிர்ப்பும் சமூக வாழ்வும் பரவிக்கிடந்தது.

“நண்பர்கள் பலர் ஒன்லைனில் உள்ளனர். அவர்களையும் இணைத்து தேவைகள் தொடர்பில் முகநூலில் பதிவு போட்டோம். அதை பார்த்தவர்கள் தமக்கு தேவையானதை கேட்கக் தொடங்கினர். பருத்தித்துறை மீன் வியாபாரியை தொடர்பு கொண்டு அவரை ஊருக்கு கொண்டு வர வைச்சு நாம் எல்லாரும் சேர்ந்து மீன் வெட்டினோம். இதுவரை என்ர வீட்டில் நான் மீன் வெட்டியது இல்லை. எங்கட வீட்டில் வைத்து தான் செய்தோம். மிகப்பெரிய மீன்களை சாதரசாதாரணமாக யாரும் கொள்வனவு செயய்யமாட்டார்கள். அதற்காக துண்டுகளாக வெட்டி விற்பனைக்காக தயார்படுத்தினோம். அதை வினியோகிக்க ஏற்பாடு செய்தோம். இந்த சூழலில் விவசாயிகளையும் கொஞ்சமாவது இழந்த பொருளாதாரத்தை பெறவைத்தோம்.” என்றார் தம்பன் துஷாந்தன்.

சந்தைப்படுத்தலுக்காக மீன்வெட்டும் தம்பன் துஷாந்தன்.

இந்த கொரோனாவால், இந்த ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு என்பதற்கு அப்பால் சில நல்ல விடயங்களும் நடந்துள்ளன. என எண்ண வைக்கிறது என்றும் கூறினார் தம்பன் துஷாந்தன்.
“முன்பு விவசாயிகளுக்கு விலை நிர்ணயிப்பவர்கள் வியாபாரிகள்தான். இந்த காலகட்டத்தில் விவசாயிகளே நேரடி விற்பனையில் உள்ளனர். அதற்கான வளத்தை, சந்தர்ப்பத்தை அவர்களுக்கு நாம் உருவாக்கி கொடுக்கின்றோம். ஓரளவிற்கு அவர்களது உற்பத்தியை வீணாக்காமல் பயன்பாட்டுக்கு விடமுடிந்தது. ஆனால் இந்த சந்தர்ப்பம் ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் கிடைக்கும் சாத்தியம் இல்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்கிறோம்.” என்கிறார் துஷாந்தன்.

ஆனாலும் சமூக ஊடகங்களே கதி என்று இருக்கும் பல இளைஞர் யுவதிகள் கிராமங்களி;லும் உள்ளனர். அவர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியம். தங்கள் அயலில் உள்ள விவசாயிகளின் உற்பத்தி வீணாகாமல் சந்தைப்படுத்தும் வசதிகளை அந்த இளைஞர்களால் ஏற்படுத்திக்கொடுக்கமுடியம். தொடர்புகளை ஏற்படுத்திவிடுவதும் உதவிதான்.

இந்த சூழலில் பூசணிக்காய் , தர்ப்பூசணி என்பன மன்னர், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் சந்தைப்படுத்த முடியாமல் போன போது நிவாரண பணிகளுக்காக அவற்றை கொள்வனவு செய்வதற்கு ஒன்லைமூலம் இளைஞர்கள் சிலர் வழிப்படுத்தினர் என அறியமுடிகிறது.

யாழ்ப்பாணத்தில் ஓன்லைன் மூலம் கடல் உணவுகள் விற்பனை செய்யப்பட்டபோது மக்கள் மகிழ்ந்தனர். காரணம் இதுவரை அவர்களுக்க கிடைக்காக கடல் உணவுகள் அபரிமிதமாக தமக்கு கிடைத்ததாகக் கூறினர். உதாரணமாக இறால், பெரிய மீன்வகைகள் வடக்கு மக்களுக்கு திருப்தியாக போதியளவு கிடைப்பது அரிது என்கிறார்கள் அவர்கள். ஏனெனில் அவை ஏனைய மாவட்டங்களுக்கு குறிப்பாக நல்ல விலையைப் பெற்றுக்கொள்வதற்காக தென்னிலங்கைக்கு எடுத்துச்செல்லப்படுவது வழமை. இப்பொழுதெல்லாம் இங்கு விளையும் உணவுகள் உள்ளூரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு வாசல்களில் மீன், மரக்கறி என்பன அனுமதியுடன் பயணிக்கின்றன. கொரோனா காலம் அச்சம் தரும் காலமாயினும் மக்களின் சுய பொருளாதாரம் நஞ்சற்ற உணவின் தேவை , போன்றவற்றையும் அது உணர்த்தியுள்ளது. இவை தவிர மக்களுக்கு தமது விளைச்சல் குறித்து தெளிவு வந்துள்ளது. சுயபொருளாதார விளைச்சலை பெருமையாக கருதும் அதேநேரம் தமது உற்பத்தியின் அவசியம் உணரப்பட்டுகிறது என்பதே உண்மை.