Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இந்துக் கோயில் நடைமுறையில் மாற்றம்!?
எந்த மதத்தினருக்கும் இங்கு தடையில்லை!!

கொழும்பில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில் அது! அங்கு எப்போதும் போல் அன்றும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்து மதம் கடைப்பிடித்துவந்த சில வெளிப்படையான அம்சங்கள் கோயிலுக்கு உள்ளும் புறமும் காணாமல் போய்விட்டிருந்தன.

19.02.2018  |  
கொழும்பு மாவட்டம்
ஆலய தரிசனத்தின்போது

“புத்த மதத்தில் பிறந்தவன் நான். ஆனால் எனது குடும்பம் இந்துக் கோயில்களுக்குச் செல்லும் வழக்கம் கொண்டது. இந்த அம்மன் கோயிலைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்இ இன்றுதான் முதன் முதலாக வந்திருக்கிறேன். என் வேண்டுதல் நூறு சதவீதம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் துசார.
நெற்றி நிறைய திருநீறு பூசி சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டுகளுடன் இறுக்கமான ரிசேட் ஜீன்ஸ் அணிந்திருந்த பெண் கண் மூடி அம்மனுக்கு முன்னால் தியானத்தில் நிற்கிறார்.

வேறு  கோயிலில் இருந்த அறிவித்தல் பலகை.

 

கொழும்பில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில் அது! அங்கு எப்போதும் போல் அன்றும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்து மதம் கடைப்பிடித்துவந்த சில வெளிப்படையான அம்சங்கள் கோயிலுக்கு உள்ளும் புறமும் காணாமல் போய்விட்டிருந்தன.
இந்து சமய பாடப்புத்தகங்களில் கோவிலுக்கு நாம் செல்லவேண்டிய முறை பற்றியும் கொண்டுசெல்லும் பூக்கள், பழங்கள் பற்றியும் இதுநாள்வரை விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு மாறான முறையில் இந்தக் கோயில் நடைமுறைகள் இருப்பதை உணரமுடிந்தது.
அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்திருந்த துசாரவின் அர்ச்சனைத் தட்டில் மெலிதாக வெட்டப்பட்ட வத்தகைப்பழம், அப்பிள், அன்னாசி என இறைவனுக்கு உவப்பில்லாத பழங்கள் இருந்தன. தட்டில் இருந்த பழங்களை என்னிடம் நீட்டி எடுக்கும்படி கூறினார். அம்மனுக்கு அர்ச்சனை செய்த பழங்களை அங்குள்ளவர்களுக்கு வழங்கிச் செல்வது வழமை. நன்றி கூறியபடி நான் எடுத்துக்கொண்டேன். பௌத்த மதத்தில் பிறந்தவருக்கு இந்துமத கடவுளின் மீதான பக்தி எப்படி வந்தது என வினவியபோதுஇ “எனது 17-வது வயதிலேயே நான் தாயை இழந்தேன். இந்து மதப் பெண் கடவுள்களை தான் மானசீகமாக தாயாக வணங்கி வருகிறேன்” என்றார் துசார என்ற 22 வயது இளைஞர். அவர் கூறியது ஆச்சரியத்தின் விளிம்பில் என்னை நிற்கவைத்தது.

துசார பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி பெற்றுக்கொண்டு அம்மனைத் தரிசிக்க வந்தாராம். அவ்வளவு நம்பிக்கை கொண்டவர்களாக பல பௌத்தர்கள் அந்த அம்மன் கோயிலில் நின்றிருந்தனர். அவர்கள் அணிந்திருக்கும் குறிப்பாக பெண்கள் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே அவர்கள் இந்துக்களா பௌத்தர்களா என இனம்காண முடிந்தது.
முன்பு இந்துக்களில் ஆண்கள் வேட்டி உடுத்தி மேற்சட்டை அணியாமலும் பெண்கள் புடவைஇபாவாடை-தாவணி அல்லது நீளப் பாவாடை-சட்டை அணிந்தும்தான் கோயிலுக்குச் செல்லும் வழக்கம் முக்கிய அம்சமென கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் ‘சல்வார்’ எனும் வட இந்தியர்களின் உடை தென் இந்தியாவிற்குள் நுழைந்து இலங்கைக்கும் பரவியது. அணிவதற்கு சுலபமானதுஇ அழகானது பாதுகாப்பு நிறைந்தது என்கிற காரணங்களால் பெருமளவு இந்துப் பெண்கள் சல்வாருக்கு மாறி சாமி தரிசனத்திற்குத் தயாரானார்கள். பெண்கள் நினைத்த இம்மூன்று காரணங்களுக்கும் அப்பால் சல்வாரை கண்ணியமான உடையெனக் கருதி ஏற்றுக்கொண்டது இந்து கலாசாரம். அதன் பின்னர் பாவாடை-தாவணிகளும் நீளப் பாவாடை-சட்டைகளும் காணாமல் போயின. புடவை அணிவது வெகுவாய்க் குறைந்தது.
ஆனாலும் இன்று கொழும்பில் பல கோயில்களில் விளம்பரப் பலகை வைத்து பெண்கள் எவ்வாறான ஆடை உடுத்து வரவேண்டும் என அறிவிப்பு விடுத்துள்ளார்கள். எனினும் நான் நின்றுகொண்டிருந்த அந்தக் கோயில் ஏனைய மதத்தவரையும் உள்வாங்குவதற்காக இறுக்கமான மதக் கட்டுப்பாடுகளினின்று தளர்ந்திருப்பதாய் பட்டது. ஆக இந்து மதத்தவர்களை மட்டுமின்றி சகல இன மதத்தவர்களையும் ஒன்றுகூட்டும் இடமாக இந்தக் கோயில் மாறியிருப்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கத்தக்கதே!

“நான் பல வருடங்களாக இங்கு வருகிறேன். நான் மட்டுமின்றி எனது குடும்பம் மற்றும் உறவினர்களும் அடிக்கடி மயூராபதி அம்மனைத் தரிசிக்க வருகிறார்கள்இ இங்கு வந்து சென்றபின்னர்இ எங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறியுள்ளன” என மலர்ந்த முகத்துடன் கூறுகிறார் வினோதினி.

இந்துக் கோயிலுக்குள் செல்வதற்கு பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகின்ற உடைக் கட்டுப்பாடுகள் பல இந்துமதப் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் உரிமையை மறுக்கிறது என்பதும் இங்கு சுட்டப்படவேண்டும். உதாரணமாகஇ கொழும்பு நகரில் வேலைக்குச் செல்லும் பல பெண்கள் இந்த உடைக் கட்டுப்பாட்டால் நினைத்த மாத்திரத்தில் அல்லது தினமும் கோயிலுக்குச் செல்ல முடிவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்துக் கடவுள்களுக்கு வாசனையுள்ளதும்இ அன்றலர்ந்து வாடும் பூக்களும்இ பால் உள்ள பூக்களும் தான் உகந்தவை என மாணவர்களுக்கான சமய பாட நூல்களிலேயே எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று பல இடங்களில் இந்த நடைமுறைகள் எல்லாம் காலாவதியாகிவிட்டதற்குச் சாட்சியாக வாடாத பூக்களும் கடதாசிப் பூக்களும் கடவுளுக்கு உகந்தவையாக்கப்பட்டுள்ளன.
பௌத்தமதப் பெண்மணியிடம் தட்சிணை(பணம்) பெற்றுக்கொண்ட கோயில் பூசகர் ஒருவர் அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த மாலை ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். வாடா மல்லி மற்றும் எக்ஸோறா மலர்களுடன் நறுமணமே இல்லாத ஒருவகை வெள்ளை மலர்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது அந்த மாலை! சாமியின் கழுத்திலும் அந்த வகை மாலைகள் ஏராளம் போடப்பட்டிருந்தன.

வேறு கோயிலில் இருந்த அறிவித்தல் பலகை.

போதாதற்கு வண்ண வண்ண கடதாசிகளையும் இணைத்துக் கட்டி மாலையாக்கும் நிலையும் இன்று பல கோயில்களில் காணப்படுகின்றன. இந்துக் கோயில்களுக்குள் நுழைந்தால் பூக்களின் நறுமணங்களும் பத்திகளின் வாசனையும் இணைந்து பக்தனின் மனதைப் பரவசமாக்கிவிடும் என்கிற தன்மை அங்கு காணாமல் போயிருந்தது.
இது பற்றி பூக்கடைக்காரரிடம் வினாவியபோதுஇ “இந்தக் கோயிலுக்கு வரும் அதிகளவிலான சிங்கள மக்கள் பலவண்ண மாலைகளைத்தான் விரும்பி வாங்குகிறார்கள். பலவண்ணப் பூக்களைக்கொண்டு கட்டப்படுகின்ற மாலைகள் என்றால் நல்ல விலைக்கு விற்கமுடியும். பூசைக்கு உகந்தவை எனக் கூறப்படும் பூக்கள் இங்கு கிடைப்பதில்லை. நகரத்தில் பூக்களை எங்கு உற்பத்தி செய்ய முடியும்? தூர இடங்களில் இருந்து பூக்களைக் கொண்டுவருவதும் மிகவும் சிரமமாக உள்ளது. வாடாத பூக்களைக் கொண்டு கட்டினால் இன்று விற்க முடியாவிட்டாலும் நாளை விற்று விடலாம். வியாபாரம் பாதிக்காது” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வியாபாரி. மதத்தின்பாற்பட்ட இந்த மாற்றங்கள் எல்லாம் காலத்தின் கட்டாயமா? அல்லது ஒரு சாராருக்கான வியாபார மார்க்கமா? என்ற கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன.

கடதாசியினால் செய்யப்பட்ட பூமாலை

இந்துக் கோயிலுக்கு வரும் வேறு மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் இந்துமத கலாசாரத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் கடவுளை நாடிவரும் அவர்களை நாம் சரியாக வழிகாட்ட வேண்டாமா? அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கவேண்டிய பொறுப்பு யாருக்கு உண்டு?
அந்த அம்மன் கோவிலில் பூஜை செய்யும் குருக்களில் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது “இந்து சமய அலுவல்கள் அமைச்சில் இந்து நாகரிகம் பற்றி விரிவான நூல் ஒன்று உள்ளது. அதைப் படியுங்கள் அதன்படிதான் நாங்கள் அனைத்தையும் நடத்துகிறோம்;” என்றார்.
“பேப்பர் ரிபன் கொண்ட மாலைகளைக் கடவுளுக்கு அணிவிக்கலாம் என்றும் அந்த நூலில் உள்ளதா?” என்று கேட்டதற்கு “ஆம் எல்லாமே இருக்கிறது போய்ப் படியுங்கள்” என்று கோபமாகவே கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இதற்கு மேல் யாரால் என்ன சொல்ல முடியம்?